Monsoon 2020 image: ஜம்முவில் பெய்த கனமழையால் இடிந்து விழுந்த ஆற்றுப்பாலம்! - வீடியோ
ஜம்முவில் பெய்த கனமழை காரணமாக ஆற்றுப்பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. ஆற்றில் பாயும் வலுவான நீரோட்டம் காரணமாக பாலத்தின் பாதியும் உடைந்து விழுந்தது. இதுதொடர்பான வீடியோவில் பிரம்மாண்டமான கான்கிரீட் பாலம் நீரில் இழுத்துச் செல்லப்படுகிறது.
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசமானது கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவுகளும், நீர்வீழ்ச்சிகளும் வாழ்வாதாரத்தை கடினமாக்கிவிட்டது. கால்நடை மேய்ச்சலுக்காக ரியசியின் உயரமான பகுதிக்குச் சென்ற நான்கு பேர், திங்களன்று, ஏற்பட்ட பெரிய நிலச்சரிவில் நசுங்கி உயிரிழந்தனர்.
ரம்பன் மாவட்டத்தில் பல இடங்களில் பலத்த மழை பெய்ததால் 270 கி.மீ ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை புதன்கிழமை இரண்டாவது நாளாக மூடப்பட்டது. திங்கள்கிழமை முதல் சாலைப் போக்குவரத்து கடுமையாக தடைபட்டுள்ளது.
காஷ்மீரை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் ஒரே நெடுஞ்சாலையிலும் செவ்வாய்க்கிழமை அதிகாலை போக்குவரத்துக்கு மூடக்கப்பட்டது. ஒரு பெரிய நிலச்சரிவு சாலையின் ஒரு பகுதியை மோசமாக சேதப்படுத்தியதால் ஆயிரக்கணக்கான வாகனங்கள், பெரும்பாலும் லாரிகள் இருபுறமும் சிக்கித் தவித்தன.
Jammu and Kashmir: நிலச்சரிவில் சிக்கி நான்கு பேர் உயிரிழப்பு
சாலையை மீண்டும் இயக்கக்கூடியதாக மாற்ற தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்.எச்.ஏ.ஐ) செயல்பட்டு வருவதாக மூத்த போலீஸ் அதிகாரி அஜய் ஆனந்த் தெரிவித்துள்ளார். தொடர்ச்சியான நிலச்சரிவுகள் மற்றும் கற்பாறைகள் மலை சரிவுகளில் உருண்டு வருவதால் மறுசீரமைப்பு பணிகள் தடைபட்டு வருகின்றன.
சீரற்ற வானிலை இருந்தபோதிலும் சாலையை அகற்றுவதற்கான பணியில் ஆண்கள் மற்றும் இயந்திரங்கள் உள்ளன, ஆனால் இன்று போக்குவரத்து மீண்டும் தொடங்குவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு" என்று ஆனந்த் கூறினார். ஜம்மு-காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகளில் நாளை வரை மிதமான மழை பெய்யும் என்று வானிலை அலுவலகம் தெரிவித்துள்ளது.
(Inputs from ANI & PTI)