This Article is From Jul 17, 2020

விமானத்திலிருந்து குதித்து சாகசத்தில் ஈடுபட்ட பராட்ரூப்பர்கள்! வியக்க வைக்கும் வீடியோ!!

இந்த பயணத்தில் பாதுகாப்புத் தளபதி ஜெனரல் பிபின் ராவத், ராணுவத் தலைவர் ஜெனரல் எம்.எம்.நாரவனே ஆகியோர் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

லடாக் மீது வானத்தில் சி -130 ஜே சூப்பர் ஹெர்குலஸில் இருந்து பராட்ரூப்பர்கள் குதிக்கின்றனர்

New Delhi:

லடாக் மலை மேலிருந்து அமெரிக்காவின் C-130J சூப்பர் எர்குலஸ் நான்கு என்ஜின் சரக்கு விமானத்திலிருந்து இந்தியாவை சேர்ந்த வான்குடை மிதவை படை வீரர்கள்  (paratrooper) கீழே குதிக்கும் காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

ஆக்ஸிஜன் முகமூடியை அணிந்த ஒரு பராட்ரூப்பர் முதலில் விமானத்திலிருந்து குதிக்கிறார். அவரைத் தொடர்ந்து சில வீரர்கள் அதே போல குதிக்கின்றனர். லடாக் மலைகளுக்கு மேலே இந்த காட்சி அற்புதமாக படமாக்கப்பட்டுள்ளது.

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று லாடாக்கிற்கு பயணத்தினை மேற்கொண்டிருந்தார். அப்போது ராணுவ வீரர்களின் பயிற்சிகளை மேற் பார்வையிட்டார். ராணுவ பயிற்சிகளில் இதுவும் ஒன்றாகும்.

பின்னர் ராணுவ வீரர்களுடனான கலந்துரையாடலின்போது, “உலகிற்கு சமாதானச் செய்தியை வழங்கிய ஒரே நாடு இந்தியா மட்டுமே. நாங்கள் ஒருபோதும் ஒரு தேசத்தைத் தாக்கவில்லை, எந்தவொரு நாட்டின் நிலத்திற்கும் ஒருபோதும் உரிமை கோரவில்லை. இந்தியா இந்த செய்தியை நம்புகிறது.” என ராஜ்நாத் குறிப்பிட்டிருந்தார்.

இந்த பயணத்தில் பாதுகாப்புத் தளபதி ஜெனரல் பிபின் ராவத், ராணுவத் தலைவர் ஜெனரல் எம்.எம்.நாரவனே ஆகியோர் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

.