This Article is From Nov 29, 2019

Viral: பாம்பிடமிருந்து நொடிக்கும் குறைவான நேரத்தில் தப்பி ஓடும் கீரிப்பிள்ளை

இந்த வீடியோ திங்களன்று இணையத்தில் பகிரப்பட்டது.3,000க்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டது. பலரும் வியந்து தங்களின் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

Viral: பாம்பிடமிருந்து நொடிக்கும் குறைவான நேரத்தில் தப்பி ஓடும் கீரிப்பிள்ளை

தாவி குதிக்கும் போது கீரிப்பிள்ளை வாலினை சமநிலைக்காக பயன்படுத்துகிறது.

கீரிப்பிள்ளை விஷமுள்ள  பாம்புகளை கொல்லும் திறனுக்காக  புகழ் பெற்றவை. ரூட்யார்ட் கிப்ளிங் தி ஜங்கிள் புக் பாம்பின் விஷத்தை எதிர்த்து போராடும் தன்மை கீரிப்பிள்ளைகளுக்கு உண்டு என்றும் நொடியில் பாம்பின் செயலை கண்டறிந்து தப்பி ஓடும் தன்மையும் அவைகளுக்கு உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய வன சேவை அதிகாரி சுசாந்த நந்தா பகிர்ந்த வீடியோவில் பாம்பு நொடிப்பொழுதுக்கும் குறைவான நேரத்தில் பாம்பின் பிடியிலிருந்து கீரிப்பிள்ளை தப்புகிறது. கீரிப்பிள்ளை சட்டென காற்றில் குதித்து தப்பி ஓடுகிறது. தாவி குதிக்கும் போது கீரிப்பிள்ளை வாலினை சமநிலைக்காக பயன்படுத்துகிறது. 

இந்த வீடியோ திங்களன்று இணையத்தில் பகிரப்பட்டது.3,000க்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டது. பலரும் வியந்து தங்களின் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். 

புதிய விஞ்ஞானிகளின் கருத்துப்படி, கீரிப்பிள்ளைகள் விரைவாக நகர்வதன் மூலம் பாம்புகளைத் தவிர்க்கின்றன. பாம்பு விஷத்தினால் பாதிக்கப்படுவதில்லை. ஏனென்றால் பாம்புகளுக்கு அசிடைல்கொலின்  என்ற சிறப்பு தன்மை விஷத்திற்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கின்றன. 

Click for more trending news

.