हिंदी में पढ़ें Read in English
This Article is From Jun 21, 2019

வெள்ளத்தில் அடித்துச் சென்ற குழந்தைகளை காப்பாற்றிய ஹீரோ : வைரல் வீடியோ

இணையத்தில் பகிரப்பட்டதிலிருந்து இந்த வீடியோ காட்சியினை ஆயிரக்கணக்கானோர் பார்த்து அவரின் தைரியத்தை பாராட்டியுள்ளனர். ஆனால் லீ யஜூன் அவசர காலத்தில் என்னால் என்ன செய்ய முடியுமோ அதையே செய்தேன் என்று பதிலளிக்கிறார்.

Advertisement
விசித்திரம் Edited by

இரண்டு குழந்தைகள் தண்ணீரில் அடித்துச் சென்றபோது லி யஜூன் என்ற நபர் காப்பாற்றியுள்ளார்.

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு குழந்தைகளை மீட்ட நபரை இணைய உலகம் ஹீரோவாக பாராட்டி வருகிறது.  

கடந்த திங்கள் கிழமை சீனாவின் தாஜிஷன் நகரில் ஒரு தெரு வெள்ளத்தில் மூழ்கியது. அருகில் உள்ள நதி வெள்ளப் பெருக்கு காரணமாக கரை உடைந்தது. அதில் இரண்டு குழந்தைகள் தண்ணீரில் அடித்துச் சென்றபோது லி யஜூன் என்ற நபர் காப்பாற்றியுள்ளார். 

சீன சமூக ஊடக தளத்தில் வைரலாகி விட்ட வீடியோகாட்சிகள் லீ யஜூன் குழந்தைகளை மீட்க இடுப்பளவு ஆழமுள்ள நீரில் அலைவதைக் காட்டுகிறது. 

வீடியோ காட்சியினை கீழே பார்க்கலாம்: 

Advertisement

  .  

இணையத்தில் பகிரப்பட்டதிலிருந்து இந்த வீடியோ காட்சியினை ஆயிரக்கணக்கானோர் பார்த்து அவரின் தைரியத்தை பாராட்டியுள்ளனர். ஆனால் லீ யஜூன் அவசர காலத்தில் என்னால் என்ன செய்ய முடியுமோ அதையே செய்தேன் என்று பதிலளிக்கிறார். 

Advertisement

இணையத்தில் பலரும் ‘சூப்பர் ஹீரோ' என்றும்  ‘உண்மையான சூப்பர் ஹீரோக்கள் முகமூடிகள் மற்றும் தொப்பிகளை அணிய தேவையில்லை' என்றும் கூறி வருகின்றனர். 

Advertisement