குரங்கு ஆர்டர் செய்ததை ரத்து செய்யவில்லை என்றும் அவையெல்லாம் அன்றாட தேவைக்கான பொருட்கள் தான் என்று கூறியுள்ளார்.
சீனாவில் உள்ள ஒரு மிருகக்காட்சி சாலையில் ஒரு குரங்கு ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் செய்த சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
குரங்கு ஆர்டர் செய்யும் காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் யான்செங் வைல்ட் அனிமல் வோர்ட்டில் நடந்ததாக டெய்லி மெயில் தெரிவித்துள்ளது.
மிருகக்காட்சி சாலையில் பணி புரியும் எல்.வி மெங்மெங் என்ற ஊழியர், அங்குள்ள குரங்கினை கவனித்து வரும் பணியினை செய்து வருகிறார். தன்னுடைய அன்றாட தேவைகளுக்கான பொருட்களை ஆன்லைனில் பார்ப்பது வழக்கம். அன்றும் அதுபோல் பொருட்களை பார்வையிட்டு விட்டு நேரமானதும் குரங்கிற்கு உணவை எடுத்து வர சென்றுள்ளார்.
அப்போது அங்கிருந்த குரங்கு அவரது போனை எடுத்து பொருட்களை ஆர்டர் செய்துள்ளது. திரும்பி வந்தவர் தன் போனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்துள்ளார். அவர் ஆர்டர் செய்யாத பொருட்கள் வெற்றிகரமாக ஆர்டர் செய்துள்ளதாக மெசேஜ்கள் கிடைத்துள்ளன.
புத்திசாலி குரங்கின் சிசிடிவி காட்சிகள் சீன சமூக ஊடகங்களில் வைரலாகிவிட்டன.
கீழே உள்ள வீடியோவை பாருங்கள்:
குரங்கு தன்னை கவனித்தே ஆன்லைனில் ஷாப்பிங் செய்வது எப்படி என்று கண்டுபிடித்துள்ளதாக மெங்மெங் தெரிவித்துள்ளார். மேலும் குரங்கு ஆர்டர் செய்ததை ரத்து செய்யவில்லை என்றும் அவையெல்லாம் அன்றாட தேவைக்கான பொருட்கள் தான் என்று கூறியுள்ளார்.
Click for more
trending news