বাংলায় পড়ুন Read in English हिंदी में पढ़ें
This Article is From Dec 25, 2019

பட்டமளிப்பு விழா மேடையில் CAA நகலை கழித்து எதிர்ப்பு தெரிவித்த மாணவி! - வீடியோ

புதிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பல்கலைக்கழக துணைவேந்தர், சார்பு துணைவேந்தர் மற்றும் பதிவாளர் அமர்திருந்த விழா மேடையில் CAA-ஆவணத்தை கிழித்து எதிர்ப்பு தெரிவிக்க முடிவு செய்ததாக அந்த மாணவி கூறியுள்ளார்.

Advertisement
இந்தியா Edited by (with inputs from PTI)

Highlights

  • Student tore up a copy of Citizenship (Amendment) Act on the stage
  • "We won't show our papers, Inquilab Zindabad," the student declared
  • Bengal Governor's car was surrounded by protesters at Jadavpur University
Kolkata:

மேற்குவங்கம் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் மாணவி ஒருவர் CAA நகலை கிழித்த வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

கொல்கத்தாவின் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் தேப்ஸ்மித்தா சவுத்ரி என்ற மாணவி தனது எம்.ஏ., முதுகலைப்படிப்புக்கான சான்றிதழ் மற்றும் பதக்கத்தை பெற்ற பின்னர், மேடையின் நடுவே சென்ற அவர், குடியுரிமை திருத்த சட்ட நகலை கிழித்தார். அத்துடன், ‘இன்குலாப் ஜிந்தாபாத்' என்று உரக்க கூறி சென்றார். 

இதுதொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அந்த மாணவி அளித்த பேட்டியில், புதிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பல்கலைக்கழக துணைவேந்தர், சார்பு துணைவேந்தர் மற்றும் பதிவாளர் அமர்திருந்த விழா மேடையில் CAA-ஆவணத்தை கிழித்து எதிர்ப்பு தெரிவிக்க முடிவு செய்ததாக அந்த மாணவி கூறியுள்ளார். 

மேலும், ஜாதவ்பூர் பல்கலைக்கழத்திற்கு நான் எந்த அவமரியாதையும் ஏற்படுத்தவில்லை. எனக்கு பிடித்த நிறுவனத்தில் இந்த பட்டத்தை பெற்றதில் பெருமைப்படுகிறேன். ஆனால், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான எனது எதிர்ப்பை பதிவு செய்ய இந்த மேடையைத் தேர்ந்தெடுத்தேன். எனது நண்பர்கள் பட்டமளிப்பு விழா நடைபெறும் அரங்கத்தின் வாயில் அருகே அமர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார். 
 


இந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எனது நண்பர்கள் சிலர் துணை வேந்தரிடம் இருந்து பட்டம் பெற மறுப்பு தெரிவித்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

Advertisement

இதுகுறித்து பிடிஐயிடம் பேசிய மற்றொரு மாணவர் கூறும்போது, தனது பேட்சை சேர்ந்த 25 பேர் பட்டம் பெற மேடைக்கு செல்லவில்லை. நாங்கள் அனைவரும் பட்டம் பெறுவதற்கான அங்கிகளை அணிந்து வரிசையில் அமர்ந்தோம். ஆனால், எங்கள் பெயர் அழைக்கப்பட்ட போது நாங்கள் மேடைக்கு செல்லவில்லை. இது எங்களின் எதிர்ப்பு முறை என்று அவர் கூறினார்.

கடந்த 2015ம் ஆண்டுக்கு முன்பு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளிலிருந்து மதத் துன்புறுத்தல்கள் காரணமாக இந்தியாவுக்குள் தப்பியோடி வந்த முஸ்லிம் அல்லாத இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்தகள் மற்றும் பார்சி சமூகங்களைச் சேர்ந்த அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க முற்படும் இந்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பெரிய அளவிலான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

Advertisement

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக 2 வாரங்களுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட டெல்லி ஜாமியா பல்கலைக்கழகம் மற்றும் உத்தர பிரேதசம் ஆலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலை தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் போராட்டம் நடைபெற தொடங்கியது. 

With inputs from PTI

Advertisement