Read in English
This Article is From Jan 13, 2020

Video: காரின் அடியில் சிக்கிய நபரை காப்பாற்றிய மக்கள்

சிஜிடிஎன் செய்தி படி, 30க்கும் மேற்பட்ட நல்ல எண்ணம் கொண்டவர்கள் ஒன்றாக வந்து வாகனத்தை தூக்கி அடியில் சிக்கிய பெண்ணை காப்பாற்றியுள்ளனர்.

Advertisement
விசித்திரம் Edited by

அதிர்ஷ்டவசமாக உயிருக்கு ஆபத்தான காயங்கள் ஏதும் ஏற்படவில்லை.

சமீபத்தில் சீனாவில் காரின் அடியில் சிக்கிய நபரை சாலையில் சென்ற பலரும் காப்பாற்றிய  காட்சி மனதை நெகிழச் செய்துள்ளது. கடந்த வாராம் குவாங்சி ஜுவாங் தன்னாட்சி உரிமை கொண்ட பிராந்தியத்தில் உள்ள லியுஜோ நகரில் படமாக்கப்பட்ட நடந்த சம்பவம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. 

வீடியோவில் மின்சார பைக்கில் பயணம் செய்யும் ஒரு பெண்ணை கார் தட்டி கீழே விழுந்து காரின் அடியில் சிக்கிக் கொள்கிறார். விபத்துக்கு பின் காரின் அடியில் இருக்கும் நபரை சாலையில் உள்ள அனைவரும் காரைத் தூக்கி காப்பாற்றுகின்றனர். யூடியூபில் பகிரப்பட்ட இந்த சிசிடிவி காட்சிகள் பலரும் காரை சாய்க்க ஒன்றாக இணைந்து வேலை செய்வதைக் காட்டுகிறது. 

சிஜிடிஎன் செய்தி படி, 30க்கும் மேற்பட்ட நல்ல எண்ணம் கொண்டவர்கள் ஒன்றாக வந்து வாகனத்தை தூக்கி அடியில் சிக்கிய பெண்ணை காப்பாற்றியுள்ளனர்.

Advertisement

  .  

மீட்கப்பட்ட பின்னர் அந்த பெண் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அதிர்ஷ்டவசமாக உயிருக்கு ஆபத்தான காயங்கள் ஏதும் ஏற்படவில்லை.

சீனாவில் இரக்கமுள்ள வழிப்போக்கர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ கனரக வாகனங்களை தூக்குவது இது முதல்முறையல்ல. கடந்த ஆண்டு ஜூலை மாதம் சாலை விபத்து நடந்த இடத்திலிருந்த மக்கள் ஒன்று கூடி விபத்தில் சிக்கியவரை காப்பாற்றினர்.

Advertisement
Advertisement