“பொது இடங்கள் சுத்தமாகவும் நேர்த்தியாகவும் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டுமென” கூறியிருந்தார்.
Chennai/ New Delhi: சீன அதிபர் ஜி ஜின்பிங்குடனான தனது இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி, மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரையில் இன்று காலை 30 நிமிடம் குப்பைகளை அகற்றி தூய்மை குறித்து நாட்டு மக்களுக்கு வலியுறுத்தினார்.
“பொது இடங்கள் சுத்தமாகவும் நேர்த்தியாகவும் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டுமென” கூறியிருந்தார்.
பிரதமர் மோடி ட்வீட் செய்த வீடியோவில், அவர் தங்கியிருக்கும் தாஜ் ஃபிஷர்மேன் கோவ் ரிசார்ட் மற்றும் ஸ்பாவுக்கு அருகிலுள்ள ஒரு கடற்கரையில் குப்பைகளை எடுப்பதைக் காணலாம்.
“இன்று காலை மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரையில் தேங்கியிருந்த குப்பைகளை அகற்றி ஹோட்டல் ஊழியர் ஜெயராஜ் என்பவரிடம் ஒப்படைத்தாதாக” ட்விட்டரில் குறிப்பிட்டுருந்தார்.
இது தொடர்பான 3 நிமிடங்கள் கொண்ட வீடியோ காட்சியை பிரதமர் நரேந்திர மோடி தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.