100, 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை, கொல்கத்தாவின் மத்திய பிசினஸ் மாவட்டத்தில் இருக்கும் கட்டடத்தின் 6வது மாடியிலிருந்து தள்ளி விடுவது வீடியோவில் தெரிகிறது.
Kolkata: கொல்கத்தாவில் உள்ள ஓர் அடுக்குமாடி கட்டடத்தில், வருவாய் புலனாய்வு இயக்குநகரம் என்னும் டிஆர்ஐ (DRI) பிரிவைப் சேர்ந்தவர்கள் சேர்ந்தவர்கள் அதிரடி ரெய்டு மேற்கொண்டுள்ளனர். அப்போது, கட்டடத்திலிருந்து கட்டுக் கட்டாக ரூபாய் நோட்டுகள் தூக்கியெறியப்பட்டுள்ளன. இந்த கரன்சி மழைப் பொழிவு குறித்தான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
100, 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை, கொல்கத்தாவின் மத்திய பிசினஸ் மாவட்டத்தில் இருக்கும் கட்டடத்தின் 6வது மாடியிலிருந்து தள்ளி விடுவது வீடியோவில் தெரிகிறது.
சம்பந்தப்பட்ட கட்டடத்தில் ஏற்றுமதி - இறக்குமதியில் ஈடுபட்டு வந்த ஒரு தனியார் நிறுவனத்தில் வரி எய்ப்புப் புகார் வந்ததைத் தொடர்ந்து டிஆர்ஐ அதிகாரிகள், அதிரடி சோதனை நடத்தச் சென்றுள்ளனர்.
இந்த நேரத்தில்தான் திடீரென்று கட்டடத்திலிருந்து கரன்சி நோட்டுகள் வெளியே தூக்கியெறியப்பட்டுள்ளன. இந்த சம்பவத்துக்கு அதிரடி ரெய்டுக்கும் எதாவது சம்பந்தம் இருக்கிறதா என்பது குறித்து இதுவரை ஸ்திரமான தகவல் இல்லை. கொல்கத்தாவில் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.