Read in English
This Article is From Aug 10, 2018

ஐதராபாத் ஐகேஇஏ ஸ்டோரில் தள்ளு முள்ளு… பதறவைக்கும் வீடியோ!

பிரபலமான ஐகேஇஏ சுவீடன் பிராண்டு, வீட்டு உபயோக பொருட்களின் ஸ்டோர், இந்தியாவில் முதல் கிளையை தொடங்கியுள்ளது

Advertisement
நகரங்கள் Posted by (with inputs from Agencies)
Hyderabad:

பிரபலமான ஐகேஇஏ சுவீடன் பிராண்டு, வீட்டு உபயோக பொருட்களின் ஸ்டோர், இந்தியாவில் முதல் கிளையை தொடங்கியுள்ளது. ஹைதரபாத்தில், 4 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள ஐகேஇஏ ஸ்டோர், வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அடுத்த 7 ஆண்டுகளில், மேலும் 25 கிளைகள் இந்தியாவில் தொடங்கும் திட்டத்தில் ஐகேஇஏ நிறுவனம் ஈடுபட்டுள்ளது. குறைந்த விலையில் தரமான வீட்டு உபயோகப் பொருட்கள் ஐகேஇஏ ஸ்டோரில் விற்பனைக்கு உள்ளது. 

வீடியோவைக் காண:

மேலும், 1000 பேர் அமரும் உணவகம், 7000 பொருட்கள் என வாவ் சொல்ல வைக்கும் பல வசதிகளை இந்த ஐகேஇஏ ஸ்டோர் கொண்டுள்ளதால், இன்று காலை முதல் கடைக்கு பெரும் திரளான மக்கள் கூட்டம் வந்து கொண்டிருக்கிறது. 

ஒரு கட்டத்திற்கு மேல் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் ஐகேஇஏ நிறுவன ஊழியர்கள், குறிப்பிட்ட அளவிலான மக்களை மட்டும் உள்ளே அனுப்பி, பிறரை காத்திருக்குமாறு வேண்டினர். இருந்தும் மக்களுக்கு மத்தியில் தள்ளு முள்ளு நடந்து வருகிறது.

Advertisement

இந்த விவகாரம் குறித்து ஐகேஇஏ கடையின் மேலாளர் ஜான் அக்கீலியா, ‘நகரத்தின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் வெள்ளம் கடைக்குள் வந்து கொண்டே இருக்கின்றது. இன்று காலை கடையை திறந்த போதுதான், எங்கள் ஊழியர்களால் மக்களைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. அதுவும், வரிசையை உடைத்துக் கொண்டு சிலர் கடைக்கு உள்ளே நுழைய முற்பட்டபோது மிகவும் பதற்றம் அடைந்தோம்’ என்று படபடப்புடன் நிலைமை குறித்து விளக்கினார். 

வித்யா என்ற வாடிக்கையாளர், ‘இது திருப்பதியில் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்வதை விட மோசமானதாக இருக்கிறது’ என்று வருத்தப்பட்டரார்.

Advertisement

அதே நேரத்தில் ஐகேஇஏ நிறுவனத்தின் இந்திய சிஇஓ, ‘எங்களுக்குக் கிடைத்திருக்கும் இந்த வரவேற்பு மெய் சிலர்க்க வைக்கிறது. இந்தக் கடையை திறப்பதற்கு முன்னர் சுமார் 1,000 இந்திய வீடுகளுக்குச் சென்று, அவர்களுக்கு என்னப் பிடிக்கும், எது தேவை என்பன குறித்தெல்லாம் கள ஆய்வு மேற்கொண்டோம். இந்திய மக்களின் ரசனைக்கு ஏற்றாற் போல எங்கள் ஸ்டோர்களில் பொருட்கள் இருக்கும்’ என்று மகிழ்ச்சிப் பொங்க கூறியுள்ளார்.

ஐகேஇஏ நிறுவனம் அதற்குள் 950 பேரை வேலைக்கு எடுத்துள்ளது. இதில் 50 சதவிதத்துக்கும் மேற்பட்டோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வேலை வாய்ப்பு இன்னும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

Advertisement