“இது செம சூப்பர். அதுவும் சானிடைசர் வைத்து வரும் இடம் பிரமாதம்!,” என்று வீடியோவைப் பார்த்த ஒருவர் வியக்கிறார்.
கொரோனா வைரஸால் உலகமே முடங்கிப்போயுள்ள நிலையில், இந்தக் காலத்தை ஆக்கப்பூர்வமாகவும் ஆரோக்கியமாகவும் கடத்திட பலரும் பல்வேறு வகைகளில் தொடர்ந்து முயன்று வருகிறார்கள். இந்நிலையில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு ஸ்டன்ட் கலைஞர்கள் குழு, சமூக விலகலைக் கடைபிடித்து ஒரு அட்டகாசமாக ஸ்டன்ட் சீக்வன்ஸை உருவாக்கியுள்ளார்கள்.
இரண்டு நிமிடங்களைத் தாண்டியோடும் வீடியோவில், பல வெட்டுகள் இருக்கின்றன. அதில் ஒருவர் கேமராவை நோக்கி அடிக்க, அதற்கான ரியாக்ஷனை இன்னொருவர் இன்னொரு இடத்திலிருந்து கொடுக்கிறார். இப்படியாக ஒருவரை ஒருவர் அடிப்பது போல, சாதுரியமாக எடுக்கப்பட்டுள்ளது. உண்மையில் இந்த மொத்த வீடியோவும், அவரவர் தங்கள் வீடுகளில் ரெக்கார்டு செய்துள்ளனர். ஆனால், ஒவ்வொரு அடிக்கு ஏற்றாற் போல ரியாக்ஷன், மீண்டும் அடி கொடுக்கும் கன்டினிவிட்டி என எல்லாம் கச்சிதமான எடிட் மூலம் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த சண்டையில் வாழைப்பழம், தலையணை, ஷூக்கள் எல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளது தனிச் சிறப்பு. இந்த வீடியோவை French school Campus Univers Cascades பகிர்ந்ததில் இருந்து, படுவைரலாக மாறியுள்ளது. வீடியோவைப் பார்க்க:
“இது செம சூப்பர். அதுவும் சானிடைசர் வைத்து வரும் இடம் பிரமாதம்!,” என்று வீடியோவைப் பார்த்த ஒருவர் வியக்கிறார். இன்னொருவர், ‘இந்த வீடியோ என்னை சிரிக்க வைத்தது. அமேசிங்,' என்று பாராட்டுகிறார்.
ட்விட்டரிலும் இந்த வீடியோ பகிரப்பட்டு வைரலாக மாறியுள்ளது. ட்விட்டரில் சுமார் 1.3 கோடி முறை இந்தக் காணொலி பார்க்கப்பட்டுள்ளது. பலரும் தங்கள் பக்கங்களில் இந்த வீடியோவைப் பகிர்ந்து வருகிறார்கள்.
Click for more
trending news