தென்கிழக்கு ஆசியாவில் பறக்கும் பாம்புகள் அதிகம் காணப்படுகிறது.
Bhubaneswar: மிகவும் அரிதான பறக்கும் பாம்பு ஒன்று ஒடிசாவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனை வைத்துக்கொண்டு வித்தை காண்பித்து பாம்பாட்டி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புவனேஸ்வரத்தில் பாம்பாட்டி ஒருவர் பறக்கும் பாம்பை வைத்துக் கொண்டு வித்தை காண்பித்து அதன் மூலம் மக்களிடம் காசு வாங்கி வந்துள்ளார். சட்டப்படி வன விலங்குகளை வைத்து வர்த்தகத்தில் ஈடுபடுதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் பாம்பாட்டி குறித்து வனத்துறையினருக்கு சிலர் தகவல் கொடுத்துள்ளனர். இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட அவர்கள் பாம்பாட்டியை கைது செய்தனர்.
அவரிடமிருந்து பறக்கும் பாம்பு ஒன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அளவில் சிறியதாகவும், சீற்றத்துடன் காணப்படும் பாம்பு, பாம்பாட்டியின் கையில் மட்டும் அடங்கி விடுகிறது.
பறக்கும் பாம்புகள் தென் கிழக்கு ஆசியாவில் காணப்படுகின்றன. இந்த இனம் தற்போது அரிதாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
(With Inputs From ANI)