This Article is From Nov 06, 2019

வீடியோ: குஜராத்தில் குளியலறையில் நுழைந்த முதலை

ஒரு மணிநேரம் நீடித்த மீட்பு நடவடிக்கையில் அறக்கட்டளையைச் சேர்ந்த கிருஷ்ண கயக்வாட் மற்றும் மணிஷ் பிஸ்ட் ஆகியோரால் கைப்பற்றப்பட்டது.

வீடியோ: குஜராத்தில் குளியலறையில் நுழைந்த முதலை

பெரிய முதலை ஒன்று அங்கு இருந்துள்ளது

குஜராத்தைச் சேர்ந்த ஒருவர் வீட்டின் குளியலறையில் முதலையைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். வதோதராவில் வசிக்கும் மகேந்திர பதியார் என்பவர் குளியலறையில் சத்தம் கேட்டு அங்கு சென்றுள்ளார். ஒருவேளை பூனையாக இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டுள்ளார்.

குளியலறைக்கு சென்று பார்த்தவருக்கு அதிர்ச்சி அடைந்தார். பெரிய முதலை ஒன்று அங்கு இருந்துள்ளது. மகேந்திர பதியார் உடனடியாக முதலையை பிடிக்க வனவிலங்கு மீட்பு அறக்கட்டளைக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதிகாலை 2.54 மணியளவில் வனவிலங்கு காப்பாளர்கள் அவரது வீட்டை அடைந்தனர்.

“மிகவும் இருட்டாக இருந்ததால் அதைப் பிடிக்க கடினமாக இருந்தது” என்று வனவிலங்கு மீட்பு அறக்கட்டளையின் உறுப்பினர் டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு தெரிவித்தார். 

ஒரு மணிநேரம் நீடித்த மீட்பு நடவடிக்கையில் அறக்கட்டளையைச் சேர்ந்த கிருஷ்ண கயக்வாட் மற்றும் மணிஷ் பிஸ்ட் ஆகியோரால் கைப்பற்றப்பட்டது. அந்த வீடியோவை கீழே காணலாம்.

வனவிலங்கு மீட்பு அறக்கட்டளையின் அரவிந்த் பவார், “முதலை அருகிலுள்ள விஸ்வாமித்ரி ஆற்றில் இருந்து வீட்டிற்குள் நுழைந்திருக்கலாம். நகரத்தில் குடியிருப்பு பகுதிகளுக்குள் முதலைகள் நுழைந்த சம்பவங்கள் அசாதாரணமானது அல்ல, ஏனெனில் இந்த நதி பல ஊர்வனவற்றின் இருப்பிடமாக உள்ளது” என்று NDTVக்கு தெரிவித்தார்.

ஆகஸ்ட் மாதம் வதோதராவின் நீரில் மூழ்கிய தெருவில் ஒரு முதலை நாயைத் தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகியது.

Click for more trending news


.