This Article is From Oct 17, 2018

தண்ணீர் கேன் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்!

தமிழக அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து தண்ணீர் கேன் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.

தண்ணீர் கேன் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சட்ட விரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை தடுக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சட்டவிரோதமாக நிலத்தடிநீர் உறிஞ்சப்படுவதை தடை செய்து உத்தரவிட்டது.

இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் என்றும், இந்த தடையை நீக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தண்ணீர் கேன் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அவர்கள் கோரிக்கை ஏற்கப்படாததால் சென்னை மற்றும் புறநகரங்களில் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் நேற்று முன்தினம் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

இதனால் சென்னையில் பல்வேறு இடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. சென்னையில் முக்கிய வணிக வளாகங்கள் இன்று மூடப்பட்டது. தொடர் தண்ணீர் இல்லாமல் இருந்தால் பெரும் ஓட்டல்களும் மூடப்படும் சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில், தமிழக அரசு சார்பில், இன்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில், சுமூக உடன்பாடு எட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக தெரிவித்துள்ளனர். ஆனால், தமிழ்நாடு தண்ணீர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் போராட்டத்தைத் தொடர்வதாக அறிவித்துள்ளனர்.

.