This Article is From Jul 12, 2019

தமிழகத்தில் அடுத்த 3 தினங்களுக்கு மழை வாய்ப்பு!! வானிலை ஆய்வு மையம் தகவல்!

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
தமிழ்நாடு Written by

தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்னை அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் நிலவும் கடும் தண்ணீர் பஞ்சம் காரணமாக குடிநீருக்காக மக்கள் அல்லல் படும் நிலை உருவாகியுள்ளது. தலைநகரான சென்னையில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மழை இல்லாமல், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் அனைத்தும் வறண்டுவிட்டது. நீர் நிலைகள் சரியான முறையில் பராமரிக்கப்படவில்லை. 

ஏரி, ஆறு, வாய்க்கால் என அனைத்து பகுதிகளிலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு விட்டதால் நீர் ஆதாரம் குறுகிவிட்டது. இதனால் மக்கள் நல்ல மழையை எதிர்பார்த்துள்ளனர். 

இந்த நிலையில் அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். பகல் வெயில் காணப்பட்டாலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. 

Advertisement

ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல்,  தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

Advertisement