This Article is From Jun 24, 2019

காலிக்குடங்கள் இங்கே; தண்ணீர் எங்கே? மு.க.ஸ்டாலின் ஆர்ப்பாட்டம்

சென்னை மெட்ரோ வாட்டர் குழாய்களில் வழங்கும் தண்ணீர் சுமார் 40 சதவீதம் அளவிற்கு நிறுத்தப்பட்டுள்ளது. சென்னைக்கு ஒரு நாளைக்கு 800 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் 525 மில்லியன் லிட்டர் மட்டுமே தற்போது, தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.

காலிக்குடங்கள் இங்கே; தண்ணீர் எங்கே? மு.க.ஸ்டாலின் ஆர்ப்பாட்டம்

தண்ணீர் பஞ்சம் விவகாரத்தில் மாநில அரசுக்கு எதிராக மு.க.ஸ்டாலின் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

ஹைலைட்ஸ்

  • இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தண்ணீர் பஞ்சம் குறித்து கவனம் கொள்ளவில்லை.
  • தண்ணீர் பஞ்சம் திடீரென வந்தது இல்லை.
  • நேற்று முதல் திமுக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.
Chennai:

தமிழகத்தில் நிலவி வரும் கடுமையான தண்ணீர் பஞ்சத்தை, தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை எனக்கூறி அதிமுக அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் திமுக சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில் நிலவும் கடும் தண்ணீர் பஞ்சம் காரணமாக குடிநீருக்காக மக்கள் அல்லல் படும் நிலை உருவாகியுள்ளது. தலைநகரான சென்னையில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மழை இல்லாமல், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் அனைத்தும் வறண்டுவிட்டது. நீர் நிலைகள் சரியான முறையில் பராமரிக்கப்படவில்லை. ஏரி, ஆறு, வாய்க்கால் என அனைத்து பகுதிகளிலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு விட்டதால் நீர் ஆதாரம் குறுகிவிட்டது.

இதனால், சென்னை மெட்ரோ வாட்டர் குழாய்களில் வழங்கும் தண்ணீர் சுமார் 40 சதவீதம் அளவிற்கு நிறுத்தப்பட்டுள்ளது. சென்னைக்கு ஒரு நாளைக்கு 800 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் 525 மில்லியன் லிட்டர் மட்டுமே தற்போது, தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.

ஆனால், இந்த தண்ணீர் பஞ்சம் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இதனை ஒரு பொருட்டாகவே கருதவில்லை என மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

தண்ணீர் பிரச்னையை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை எனக்கூறி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் ஸ்டாலின் தலைமையில் சென்னை சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதில் காலிக்குடங்கள் இங்கே; தண்ணீர் எங்கே? என்ற வாசகங்கள் அடங்கிய காலிக்குடத்துடன் ஸ்டாலின் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், மழைக்காக அதிமுகவினர் யாகம் நடத்தியிருந்தால் தவறில்லை. ஆனால் மழைக்காக அதிமுகவினர் யாகம் நடத்தவில்லை. தங்கள் பதவியை காப்பாற்றிக்கொள்ளவே யாகம் நடத்தியிருக்கிறார்கள். தண்ணீர் இல்லை எனக் கூறி பள்ளிகள் தனியார் நிறுவனங்கள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் தண்ணீர் இல்லை எனக்கூறி பள்ளிகளை மூடக்கூடாது என அமைச்சர்கள் கூறி வருகின்றனர்.

இப்படி, தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் குறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “சென்னைக்குக் குடிநீர் அளிக்கும் 4 ஏரிகளும் வறண்ட நிலையில் இருக்கின்றன. மழைப் பொழிவு குறைவாக இருந்ததனால்தான் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம், புழல் ஏரிகளில் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட இல்லை. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் இந்த ஏரிகளில் 3 டிஎம்சி தண்ணீர் இருந்தது என்று கூறினார்.

With inputs from IANS

.