This Article is From Aug 13, 2019

கிடுகிடுவென உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்… டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு!

மேட்டூர் அணை நீர் தரப்பு மூலம் சுமார் 16.5 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும்.

Advertisement
தமிழ்நாடு Written by

மேட்டூர் அணையை ஒட்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கைக் கொடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தது. நேற்று ஒகேனக்கல் பகுதிக்கு, ஒரு வினாடிக்கு 3 லட்சம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்ததாக தெரிகிறது. இதனால், மேட்டூர் அணையின் நீர் மட்டம் கிடுவென கிடுவென உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியதாக தெரிகிறது. 

மேட்டூர் அணை வரலாற்றில், 65வது முறையாக நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இன்று காலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைத்துள்ளார். பல அமைச்சர்களும் அணைத் திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 

மேட்டூர் அணையிலிருந்து செல்லும் நீரானது, டெல்டா மாவட்டங்கள் அனைத்துக்கும் சென்றடைய வழிப் பாதைகள் அனைத்தும் முறையாக தூர்வாரப்பட்டுள்ளதாக பொதுப் பணித் துறை அதிகாரிகள் கூறுகின்றனர். மேட்டூர் அணையை ஒட்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கைக் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Advertisement

மேட்டூர் அணை நீர் தரப்பு மூலம் சுமார் 16.5 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும் ஈரோடு, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களுக்கான கால்வாய் பாசன நீரும் திறக்கப்பட்டுள்ளது. பாசனத்திற்காக இந்த காலக்கட்டத்தில் 220 டி.எம்.சி தண்ணீர் கொடுக்க வாய்ப்பிருப்பதாகவும் பார்க்கப்படுகிறது. 

வடகிழக்கு பருவமழையும் கை கொடுக்கும் பட்சத்தில் மேட்டூர் அணையிலிருந்து 137 நாட்களுக்கு பாசனத்திற்கு நீர் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று திறக்கப்படும் மேட்டூர் அணையின் நீரானது, இன்னும் 3 நாட்களில் கல்லணையை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement

மேட்டூர் அணையின் மொத்த கொள்ளளவு 93.4 டி.எம்.சி ஆகும். தற்போது 66.43 டி.எம்.சி நீர் இருப்பு உள்ளது. 

Advertisement