Read in English
This Article is From Jun 10, 2019

''மேற்கு வங்கத்தில் கலவரத்தை தூண்ட பாஜக முயற்சிக்கிறது'' - மம்தா குற்றச்சாட்டு

தனது குரலை முடக்குவதற்கு பாஜக சதி செய்வதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

Advertisement
இந்தியா Edited by

மேற்கு வங்க தேர்தலில் மம்தாவின் கட்சிக்கு பாஜக கடும் நெருக்கடி கொடுத்தது.

Kolkata:

மேற்கு வங்கத்தில் கலவரத்தை தூண்டுவதற்கு பாஜக முயற்சிக்கிறது என்று முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். 

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ஆளும் மம்தாவின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு பாஜக கடும் போட்டி கொடுத்தது.  மொத்தம் உள்ள 42 தொகுதிகளில்  திரிணாமூல் காங்கிரஸ் 22 தொகுதிகளில் வெற்றி பெற்றது.  பாஜகவுக்கு 18 தொகுதிகள் கிடைத்தன.  

2014 மக்களவை தேர்தலில் மம்தா கட்சி 32 தொகுதிகளிலும், பாஜக 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தது.  தற்போது பாஜகவுக்கு 16 தொகுதிகள் கூடுதலாக கிடைத்துள்ளன.  

இந்த நிலையில் மாநில நிலவரம் குறித்து மம்தா பானர்ஜி கூறியதாவது-

Advertisement

மேற்கு வங்கத்தில் கலவரத்தை தூண்டுவதற்கு பாஜக முயற்சி செய்கிறது. இதற்காக பேஸ்புக், வாட்ஸப் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் கோடிக்கணக்கான  ரூபாய்  செலவு  செய்யப்படுகிறது.  மேற்கு வங்கத்தில் கலவரம் ஏற்பட்டால் அதற்கு பாஜகதான் முக்கிய காரணம். 

இவ்வாறு அவர் கூறினார். மேற்கு வங்கத்தில் அரசியல் பரபரபுக்கு மத்தியில் அம்மாநில கவர்னர் கேசரி நாத் திரிபாதி உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது. 

Advertisement
Advertisement