மதுரை வந்துள்ள கர்நாடக முதல்வர் குமாரசாமி அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்துடன் , காவிரி நீரை பகிர்ந்து கொள்வதில் எந்த பிரச்னையும் இல்லை என்று கூறியுள்ளார்.
“கர்நாடகாவில் கடவுள் அருளால் நல்ல மழை பொழிவு கிடைத்துள்ளதால், தமிழகத்துக்கு நீர் தருவதில் எந்த பிரச்னையும் இல்லை” என்றார்.
கர்நாடகாவின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 10 நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. அதனால் அம்மாநிலத்தில் உள்ள கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளில் நீரின் அளவு அதிகரித்துள்ளது. ஏற்கனவே, கபினி அணையில் இருந்து 35,000 கன அடி நீர் திறக்கப்பட்டு, மேட்டூர் அணை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது. அந்த அணையில் இருந்தும் நீர் திறக்கப்படும் பட்சத்தில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதிகரிக்கும். டெல்டா பகுதிக்கும் நீர் திறந்து விடப்படும்.