Telangana Assembly Election 2018:காங்கிரஸுடன் கூட்டணி ஏற்பட்டைத் தொடர்ந்து, எதிர்கட்சிகளை ஓரணியில் இணைக்கும் முயற்சியில் சந்திரபாபு நாயுடு ஈடுபட்டுள்ளார்
ஹைலைட்ஸ்
- தெலங்கானா தேர்தலுக்காக காங்கிரஸ் - தெலுங்கு தேசம் கூட்டணி வைத்துள்ளன
- பாஜக-வுடன், நாயுடு கூட்டணியை முன்னர் முறித்துக் கொண்டார்
- நாயுடு, எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்
Hyderabad: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன்(Chandrababu Naidu) காங்கிரஸ் சிறிது காலமாக நட்புடன் இருந்து வருகிறது. இந்நிலையில் ஐதராபத்திற்கு சென்றிருந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி(Rahul Gandhi), சந்திரபாபு நாயுடுவை சந்தித்து உரையாடினார். அப்போது, ‘எங்கள் இருவருக்குமான நெருக்கம் நன்றாக இருக்கிறது' என்று கூறினார்.
அவர் மேலும், ‘எங்கள் இருவருக்கும் பரஸ்பரம் மற்றவரைப் பிடிக்கும். நாங்கள் இருவரும் இணைந்து நிறைய சாதிக்க முடியும் என்று நம்புகிறோம். அது குறித்து வரும் தேர்தலில் நீங்கள் பார்ப்பீர்கள். வரும் தேர்தலில்(Telangana Election) நாங்கள் இணைந்து வெற்றி பெறுவோம்' என்று கூறியுள்ளார்.
காங்கிரஸும், சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியும் வெகு காலமாக அரசியல் எதிரிகளாக செயல்பட்டு வந்தன. ஆனால், சந்திரபாபு நாயுடுவுக்கு பாஜக-வுடன் ஏற்பட்ட மோதலை அடுத்து, இருவருக்கும் இடையில் நட்பு உருவானது. அடுத்த மாதம் நடக்கவுள்ள தெலங்கானா சட்டமன்றத் தேர்தலுக்காக இரு கட்சிகளும் கூட்டணி வைத்துள்ளன.
இருவரது கூட்டணி குறித்து சந்திரபாபு நாயுடு, ‘நாங்கள் இருவரும் தெளிவாக இருக்கிறோம். எங்களைப் பொறுத்தவரை தேசம் மிகவும் முக்கியமானது. தேசத்தைக் காக்கும் நோக்கில் தான் காங்கிரஸ், தெலுங்கு தேசம் மற்றும் பல கட்சிகள் ஒன்றிணைந்துள்ளோம். நாங்கள் பாஜக-வை வீழ்த்துவோம்' என்று கூறியுள்ளார்.
காங்கிரஸுடன் கூட்டணி ஏற்பட்டைத் தொடர்ந்து, எதிர்கட்சிகளை ஓரணியில் இணைக்கும் முயற்சியில் சந்திரபாபு நாயுடு ஈடுபட்டுள்ளார். அவர் கடந்த சில வாரங்களாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், திமுக தலைவர் ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டவர்களை சந்தித்து வருகிறார்.