This Article is From Jan 06, 2020

“திமுக, அதிமுகவை தூக்கியெறிய…”- மேடையில் Seeman; முழங்கிய திருமா..!!

Thiruma to Seeman: "நாம் சனாதனத்துக்கு எதிராக நிற்கப் போகிறோமா, அல்லது அம்பேத்கரியம் மற்றும் பெரியாரியத்திற்கு எதிராக நிற்கப் போகிறோமா என்பதுதான் கேள்வி"

“திமுக, அதிமுகவை தூக்கியெறிய…”- மேடையில் Seeman; முழங்கிய திருமா..!!

Thiruma to Seeman: "நாம் வாக்கு வங்கி அரசியலில் தன்னிறைவு பெறும் வரை நெளிவு சுளிவுகளோடுதான் அரசியல் உத்திகளை வகுக்க வேண்டும்."

Thiruma to Seeman: சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகிய இருவரும் கலந்து கொண்டு பேசினார்கள். இருவரும் தமிழ்த் தேசிய கோட்பாட்டில் நாட்டம் உள்ளவர்களாக இருந்தாலும், அரசியல் களத்தில் வெவ்வேறு தளங்களில் பயணிப்பவர்கள். இந்நிலையில், தங்கள் அரசியல் உத்திகள் பற்றி பேசினார்கள். தமிழ்த்தேசியத்தை வென்றெடுப்பது எப்படி என்பது குறித்துப் பேசிய திருமாவளவன், “தமிழ்த்தேசிய கோட்பாட்டில் நமக்கு எந்தவித மாறுபாடும் இருக்காது. ஆனால், அதை அடைய வேண்டிய வழியில் மாற்றுக் கருத்துகள் இருக்கலாம்,” என்றார். 

அவர் தொடர்ச்சியாக இந்திய மற்றும் தமிழக அரசியல் சூழலில் தமிழ்த்தேசியம் பற்றிப் பேசுகையில், “தமிழ் மகன்தான் தமிழ் நிலத்தை ஆள வேண்டும் என்பதிலும், தமிழர்களின் உரிமைகள் மீட்டெடுக்கப்பட வேண்டும் என்பதிலும் நமக்குள் மாற்றுக் கருத்துகள் இல்லை. ஆனால், வாக்கு வங்கி அரசியலில் நாம் எப்படிப்பட்ட நிலையில் இருக்கிறோம். தமிழக அளவில் திமுகவையும் அதிமுகவையும் தூக்கியெறியும் சக்தியை நாம் பெற்றிருக்கிறோமா. தமிழ்த்தேசியத்திற்கு எதிராக சனாதனம் நிற்கிறது. இந்திய அளவில் மாபெரும் வலிமையை சனாதனக் கோட்பாடு பெற்றிருக்கிறது.

ftg40l1g

நாம் சனாதனத்துக்கு எதிராக நிற்கப் போகிறோமா, அல்லது அம்பேத்கரியம் மற்றும் பெரியாரியத்திற்கு எதிராக நிற்கப் போகிறோமா என்பதுதான் கேள்வி. தேசிய அளவில் வலிமை பெற்றிருக்கும் கட்சிகள் இரண்டு. காங்கிரஸ் மற்றும் பாஜக. ஒன்று ஜனநாயக சக்தி, இன்னொன்று சனாதன சக்தி. ஆயிரம் முரண்பாடுகள் இருந்தாலும் காங்கிரஸால்தான் பாஜகவை வீழ்த்த முடியும் என்கிற தெளிவு வேண்டும். நாம் வாக்கு வங்கி அரசியலில் தன்னிறைவு பெறும் வரை நெளிவு சுளிவுகளோடுதான் அரசியல் உத்திகளை வகுக்க வேண்டும்.

நாம் இந்தியர் என்று சொல்லிக் கொள்வதில் நாட்டம் இல்லை. ஆனால், நாம் இந்தியரே இல்லை என்று அமித்ஷா நிறுவப் பார்க்கிறார். அப்படி இருக்கையில் தேசிய அளவில் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து நிற்க வேண்டியத் தேவை உள்ளது,” என்று சீமானுக்கு சூசகமாக கோரிக்கை வைத்தார். 

.