This Article is From Sep 15, 2020

நீதிபதி சுப்ரமணியத்தின் கடிதத்தினை கணக்கில் கொள்ள வேண்டாம்: 6 முன்னாள் நீதிபதிகள் கடிதம்!!

சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகளான கே.சந்துரு, கே.என்.பாட்ஷா, டி.சுதந்திரம், டி.அரிபரந்தாமன், கே.கண்ணன், ஜி.எம். அக்பர் அலி ஆகியோர், நடிகர் சூர்யா குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி S.M. சுப்ரமணியம் அவர்கள் தலைமை நீதிபதிக்கு எழுதியிருந்த கடிதத்தினை கணக்கில் கொள்ள வேண்டாம் என கடிதம் எழுதியுள்ளனர்.

நீதிபதி சுப்ரமணியத்தின் கடிதத்தினை கணக்கில் கொள்ள வேண்டாம்: 6 முன்னாள் நீதிபதிகள் கடிதம்!!

"நீட்" தேர்வு ஒழிய வேண்டுமென்று சமூக அக்கறையுடன் கருத்து வெளியிட்ட நடிகர் சூர்யாவின் மேல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி S.M. சுப்ரமணியம் அவர்கள் தலைமை நீதிபதிக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளதை கணக்கில் கொள்ளவேண்டாம் என்றும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தேவையில்லை என்றும் 6 ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

முன்னதாக நீட் தேர்வு குறித்தும் நீதிமன்ற நடைமுறை குறித்தும் நடிகர் சூர்யா கூறிய கருத்து நீதிமன்ற அவமதிப்பாக கணக்கில் கொண்டு அவர் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

dgjjqefg

4slflg9o

தற்போது இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகளான கே.சந்துரு, கே.என்.பாட்ஷா, டி.சுதந்திரம், டி.அரிபரந்தாமன், கே.கண்ணன், ஜி.எம். அக்பர் அலி ஆகியோர், நடிகர் சூர்யா குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி S.M. சுப்ரமணியம் அவர்கள் தலைமை நீதிபதிக்கு எழுதியிருந்த கடிதத்தினை கணக்கில் கொள்ள வேண்டாம் என கடிதம் எழுதியுள்ளனர்.

சமீபத்தில் நீட் தேர்வு அச்சம் காரணமாக ஒரே நாளில் மூன்று மாணவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், நடிகர் சூர்யா, நீட் தேர்வுக்கு எதிராகவும் புதியகல்விக் கொள்கைக்கு எதிராகவும் அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டிருந்தார் இந்நிலையில், அவரின் அறிக்கையின் அடிப்படையில் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என எஸ்.எம்.சுப்ரமணியம் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்றம் மீதான நம்பிக்கையை குலைக்கும் வண்ணம் யாரும் பேசக்கூடாது என முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் ராஜகோபாலன் கூறியுள்ளார்.

முன்னாதாக சூர்யா தனது அறிக்கையில், “அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டிய அரசாங்கம், ஏற்றத்தாழ்வை உருவாக்குகிற கல்வி முறையைச் சட்டமாகக் கொண்டு வருகிறது. ஏழை, எளிய மாணவர்களின் நிதர்சனம் அறியாதவர்கள் கல்விக் கொள்கைகளை வகுக்கிறார்கள். கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது” எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

.