This Article is From Aug 31, 2019

தேசிய குடிமக்கள் பதிவேடு வெளிநாட்டவரை வெளியேற்ற உதவாது - அசாம் அமைச்சர் ஹிமந்தா சர்மா

Assam NRC: என்.ஆர்.சியில் பெயர்கள் இல்லாதவர்கள் சட்டரீதியாக தீர்ப்பாயத்தில் அணுகி அதற்கான தீர்ப்பு வரும்வரை அவர்களை வெளிநாட்டவர் என்று கருத முடியாது என்று மத்திய அரசு கூறியுள்ளது. என்.ஆர்.சியில் பெயர் இல்லாதவர்கள் ஒவ்வொருவரும் அயல்நாட்டினருக்கான தீர்ப்பாயத்தில் முறையிடலாம்.

Assam NRC: ன்.ஆர்.சியின் தற்போதைய வடிவத்தில் நாங்கள் நம்பிக்கை இழந்து விட்டோம்

ஹைலைட்ஸ்

  • We've lost hope in present form of NRC right after draft: Himanta Sarma
  • No quarter-final, semi-final, final for driving out Bangladeshis, he said
  • Around 41 lakh expected to be left out when final NRC is put up
Guwahati:

அசாம் அமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவரும் ஹிம்ந்தா பிஸ்வா சர்மா, தேசிய குடிமக்களின் பதிவின்படி சட்டப்பூர்வ குடியிருப்பாளர்களை அடையாளம் காணவும், வடகிழக்கு மாநிலத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறிவர்களை களையெடுக்கும் திட்டங்களில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

“வரைவுக்குப் பிறகு என்.ஆர்.சியின் தற்போதைய வடிவத்தில் நாங்கள் நம்பிக்கை இழந்து விட்டோம். பல உண்மையான இந்தியார்கள் வெளியே இருக்கும்போது, இந்த ஆவணம் அசாமிய சமுதாயத்திற்கான ஒரு சிவப்பு கடிதம் என்று எவ்வாறு கூற  முடியும்” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

“தெற்கு சல்மாரா மற்றும் துப்ரி போன்ற பங்களாதேஷின் எல்லையில் உள்ள மாவட்டங்களில், விலக்கு விகிதம் மிகவும் குறைவு, பூமி புத்ரா மாவட்டத்தில் அதிகமாக உள்ளது. இந்த என்.ஆர்.சி மீது எங்களுக்கு இனி ஆர்வம் இல்லை” என்று அவர் கூறினார்.

இறுதி அஸ்ஸாம் குடிமக்களின் பட்டியலில் சுமார் 41 லட்சம் பேர் வெளியேறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை  www.nrcassam.nic.in. என்ற தளத்தில் காணலாம். அசாமில் பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷின் எல்லையில் உள்ள வடகிழக்கு மாநிலம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான துணை ராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

என்.ஆர்.சியில் பெயர்கள் இல்லாதவர்கள் சட்டரீதியாக தீர்ப்பாயத்தில் அணுகி அதற்கான தீர்ப்பு வரும்வரை அவர்களை வெளிநாட்டவர் என்று கருத முடியாது என்று மத்திய அரசு கூறியுள்ளது. என்.ஆர்.சியில் பெயர் இல்லாதவர்கள் ஒவ்வொருவரும் அயல்நாட்டினருக்கான தீர்ப்பாயத்தில் முறையிடலாம். மேல்முறையீட்டை தக்கல் செய்வதற்கான கால அவகாசம் 60 முதல் 120 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

.