This Article is From Mar 31, 2020

‘நீங்கதான் பொறுப்பு’-னு டிரம்ப் கொடுத்த ஷாக்… பதிலடி கொடுத்த இங்கிலாந்து இளவரசர் ஹாரி!!

கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவத் தொடங்கியபோது, ஹாரியும் மேகனும் கனடாவில் இருந்துள்ளதாக தெரிகிறது

Advertisement
உலகம் Edited by

2016 ஆம் ஆண்டு டிரம்ப், அமெரிக்க அதிபர் தேர்தலுக்குப் போட்டியிட்டபோது, அவருக்கு எதிராக கருத்து தெரிவித்தார் மேகன்.

Highlights

  • ஹாரிக்கும் மேகனுக்கும் பாதுகாப்பு வழங்க முடியாது: டிரம்ப்
  • இருவரும் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள வேண்டும்: டிரம்ப்
  • அரச பொறுப்புகளிலிருந்து விலகியுள்ளனர் ஹாரியும் மேகனும்

இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் ஆகியோர், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் குடியேறியுள்ளனர். இதைத் தொடர்ந்து அரச குடும்பத்தைச் சேர்ந்த அவர்களுக்கு அரசு செலவில் பாதுகாப்பு வழங்க முடியாது என்றும், அவர்களின் சொந்த செலவில் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இரண்டு நாட்களுக்கு முன்னர் கூறினார். அதற்கு தற்போது பதிலடி கொடுக்கும் வகையில் கருத்தி தெரிவித்துள்ளார் இளவரசர் ஹாரி.

கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவத் தொடங்கியபோது, ஹாரியும் மேகனும் கனடாவில் இருந்துள்ளதாக தெரிகிறது. அவர்கள் உடனடியாக அங்கிருந்து கலிபோர்னியாவில் உள்ள தங்களது இல்லத்துக்கு தனியார் ஜெட் மூலம் வந்துள்ளனர். 

கடந்த சில மாதங்களாக கனடாவில் வசித்து வந்த ஹாரியும் மேகனும், தங்களது அரச பதவிகளைத் துறக்கப் போவதாகவும், புது வாழ்க்கையைத் தொடங்கப் போவதாகவும் கடந்த ஜனவரி மாதம் அறிவித்து இங்கிலாந்து அரச குடும்பத்திற்கு அதிர்ச்சியைக் கொடுத்தனர். இன்றுடன் அவர்கள் தங்களது அரச பதவிகளிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறுகின்றனர்.

இந்நிலையில் டிரம்ப், “இங்கிலாந்து ராணிக்கும், இங்கிலாந்துக்கும் நான் உற்ற தோழன். இந்நிலையில் அரச குடும்பத்திலிருந்து வெளியேறி ஹாரியும் மேகனும் கனடாவில் வசிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது அவர்கள் கனடாவிலிருந்து அமெரிக்காவுக்கு வந்துள்ளனர். எனவே, அமெரிக்கா அவர்களின் பாதுகாப்புக்காக செலவு செய்யாது. அவர்களின் பாதுகாப்பை அவர்கள்தான் உறுதி செய்து கொள்ள வேண்டும்,” என்று கறார் தொனியில் ட்வீட் செய்தார்.

Advertisement

அதற்கு ஹாரி மற்றும் மேகன், “அமெரிக்க அரசிடம் எங்கள் பாதுகாப்பு குறித்து உதவி கேட்கும் எண்ணம் இல்லை. தனியார் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு விட்டன,” என்று அறிக்கை வாயிலாக தெரிவித்தனர்.  

மேகன், லாஸ் ஏஞ்சலஸில்தான் வளர்ந்தார். அவரின் அம்மா இன்னும் லாஸ் எஞ்சலஸில்தான் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

நடிகரும், கலைத் துறையில் பணி செய்தவருமான மேகனுக்கு லாஸ் ஏஞ்சலஸில் பல்வேறு நபர்களுடன் தொடர்பு உள்ளது. எனவே, அவர் மீண்டும் தனது கலை வாழ்க்கையைத் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

டிஸ்னி நிறுவனம் சமீபத்தில், ஆப்ரிக்காவில் உள்ள யானைக் குடும்பத்தைப் பற்றிய ஆவணப் படம் ஒன்றில், மேகன் பணியாற்ற உள்ளார் என்று கூறியது. 

Advertisement

2016 ஆம் ஆண்டு டிரம்ப், அமெரிக்க அதிபர் தேர்தலுக்குப் போட்டியிட்டபோது, அவருக்கு எதிராக கருத்து தெரிவித்தார் மேகன். அது குறித்து டிரம்பிடம் கேட்டபோது, “அவர் அப்படிச் சொல்வார் என்று எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் அவரது புதிய ராஜ வம்ச வாழ்க்கைக்கு வாழ்த்துகள்,” என்று பதில் கூறினார். 

சமீபத்தில் போலி போன் கால் ஒன்றில் சிக்கினார் ஹாரி. அந்த போன் அழைப்பில், அதிபர் டிரம்ப்பின் பருவநிலை மாற்றத்துக்கு எதிரான நிலைப்பாட்டை விமர்சித்துப் பேசினார். 

Advertisement