This Article is From Apr 06, 2019

குக்கர் சின்னத்தை வாங்கியதே நாங்கதான்: அமைச்சர் மணிகண்டன் பகீர்!

அமமுக-வின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், 2017-ல் நடந்த ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் குக்கர் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்டார்.

குக்கர் சின்னத்தை வாங்கியதே நாங்கதான்: அமைச்சர் மணிகண்டன் பகீர்!

தமிழக அமைச்சர் மணிகண்டன், ராமநாதபுரத்தில் பிரசாரம் செய்யும்போது, ‘குக்கர் சின்னத்தை வாங்கியதே நாங்கதான்’ என்று கூறி பகீர் கிளப்பியுள்ளார். 

தமிழக அமைச்சர் மணிகண்டன், ராமநாதபுரத்தில் பிரசாரம் செய்யும்போது, ‘குக்கர் சின்னத்தை வாங்கியதே நாங்கதான்' என்று கூறி பகீர் கிளப்பியுள்ளார். 

எதிர்வரும் நாடாளுமன்றம் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி, திமுக தலைமையிலான கூட்டணி, அமமுக தலைமையிலான கூட்டணி என பல முனைப் போட்டி நிலுவுகின்றன. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் கட்சியும் களத்தில் உள்ளன. 

அமமுக-வின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், 2017-ல் நடந்த ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் குக்கர் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் அதிமுக-வும் திமுக-வும் தோல்விண்டன. சுயேட்சையாக நின்ற தினகரன் வெற்றி வாகை சூடினார். 

அதன் பின்னர் சென்ற ஆண்டு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற தனிக் கட்சியை தினகரன் ஆரம்பித்தார். அந்தக் கட்சி சார்பில் நடக்கவுள்ள நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இதையோட்டி தினகரன், ‘எங்கள் அனைத்து வேட்பாளர்களுக்கும் குக்கர் சின்னம் ஒதுக்கப்பட வேண்டும்' என்று உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், ‘குக்கர் சின்னம் கொடுப்பது குறித்து நாங்கள் எதுவும் சொல்ல முடியாது. ஆனால், தேர்தல் ஆணையம் தினகரன் தரப்புக்கு பொதுச் சின்னம் ஒன்றை ஒதுக்கலாம்' என்று உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, பரிசுப் பெட்டி சின்னம் அமமுக-விற்கு ஒதுக்கப்பட்டது. 

இந்நிலையில் ராமநாதபுரத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த அமைச்சர் மணிகண்டனர், ‘அமமுக ஒரு கட்சியா. ஆமை மூக்கன் கட்சி அது. அதற்கு சின்னமும் கிடையாது. பதிவு செய்யப்படாத ஒரு கட்சியாக அது இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் குக்கர் சின்னத்தை வாங்கியதே நாங்கள்தான். அந்த சின்னத்தை வாங்கி, சுயேட்சையாக வேட்பாளர்களை களமிறக்கி விட்டுருக்கிறோம்' என்று அதிர்ச்சியளிக்கும் வித்ததில் பேசினார். 

.