This Article is From Apr 15, 2019

அவதூறு பரப்பும் ஈ.வி.கே.எஸ் மீது வழக்கு தொடர்வோம்: ஓ.பி.எஸ் எச்சரிக்கை

அவதூறு பரப்பும் தேனி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மீது வழக்கு தொடர்வோம் என துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவதூறு பரப்பும் ஈ.வி.கே.எஸ் மீது வழக்கு தொடர்வோம்: ஓ.பி.எஸ் எச்சரிக்கை

அவதூறு பரப்பும் தேனி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மீது வழக்கு தொடர்வோம் என துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து தேனியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, அதிமுக கூட்டணி மீது தேனி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் தொடர்ந்து அவதுாறு பரப்புகிறார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம், உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்போம்.

22 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றிபெறும். எட்டுவழிச்சாலை, நீட் தேர்வில் முதல்வர் சொன்னது தான் அதிமுக நிலைப்பாடு.எதிர்க்கட்சிகள் அவர்கள் ஆட்சிக்காலத்தில் எந்த சாதனையும் செய்யவில்லை. எனவே, தவறான பிரசாரம் செய்கிறார்கள்.

திமுக காங்கிரஸ் கூட்டணியை மக்கள் எந்தக்காலத்திலும் நம்பமாட்டார்கள். மேகாதாது விவகாரத்தில் ராகுல், கர்நாடகத்தில் பேசும்போது, காங்கிரஸ் ஆட்சி வந்தால் அங்கு அணை கட்டுவோம் என்கிறார். காங்கிரஸ் நிலைபாடு என்ன?, தமிழக மக்களை வஞ்சிக்கும் கருத்துக்கள் தான் காங்கிரஸ் கூட்டணியுடையது. 

காங்கிரஸ் திமுக தமிழகத்தை வஞ்சிக்கிறார்கள். தகுதியும், திறமையும் இருந்தால், மக்கள் செல்வாக்கை பெற்றால், நீடித்து இருப்பார்கள். வாரி அரசியல் பிரச்னையில்லை. 

தேனி தொகுதியில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்தரநாத் அதிமுக சார்பில் முதல்முறையாக தேனி தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் களமிறக்கப்பட்டுள்ளார். இளங்கோவனும் தேனி தொகுதியில் முதல்முறையாக போட்டியிடுகிறார். 

இதேபோல், அமமுக சார்பில் தங்கதமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார். மூவருக்கும் இடையே அந்த தொகுதியில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. கருத்து கணிப்பு முடிவுகள் தேனி தொகுதிகளில் இழுபறி நீடிக்கும் என்றே கூறுகிறது.

.