This Article is From Nov 20, 2019

“தமிழகத்திற்காக இணைவோம்..!” - ரஜினி உடனான கூட்டணி பற்றி Kamal ஓப்பன் டாக்!

Kamal on alliance with Rajini - “நாங்கள் இணைந்து செயல்படுவோம் என்று சொன்னவுடன் கூட்டணி அமைப்பது குறித்து கவனம் செலுத்த வேண்டாம்"

“தமிழகத்திற்காக இணைவோம்..!” - ரஜினி உடனான கூட்டணி பற்றி Kamal ஓப்பன் டாக்!

"அதில் மக்கள் நலனே பிரதானம். மக்களுக்காக நாங்கள் இணைவோம் என்பதுதான் முக்கியமான செய்தி"

Kamal on alliance with Rajini - மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் (Kamal Haasan), இன்று ஆழ்வார்ப்பேட்டையில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். 

முன்னதாக, ‘அரசியல் கட்சி நடத்தி வரும் கமலுடன் இணைந்து செயல்படுவீர்களா?' என்று கேள்விக்கு ரஜினிகாந்த் (Rajinikanth), “மக்களுடைய நலனுக்காக நானும், கமல் அவர்களும் இணைய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் நிச்சயமாக இணைவோம்” என்றார். 

rajini kamal cauvery protest

இதைத் தொடர்ந்து கமலிடம் கருத்து கேட்கப்பட்டது. “நானும் எனது நல்ல நண்பர் ரஜினிகாந்தும் தமிழகத்தின் நலனுக்காக இணைய வேண்டிய சூழல் வந்தால், மக்கள் நலனுக்காக இணைந்து செயல்படுவோம்,” என்றார். 

தொடர்ந்து அவர், “நாங்கள் இணைந்து செயல்படுவோம் என்று சொன்னவுடன் கூட்டணி அமைப்பது குறித்து கவனம் செலுத்த வேண்டாம். அதில் மக்கள் நலனே பிரதானம். மக்களுக்காக நாங்கள் இணைவோம் என்பதுதான் முக்கியமான செய்தி,” என்று தெளிவுபடுத்தினார். 

மேலும் அவர், “நான் வாங்கிய பட்டங்களைவிட மக்களின், ரசிகர்களின் அன்புதான் எனக்குக் கிடைத்த மிகப் பெரிய வெகுமதி,” என்றார். 
 

.