This Article is From Nov 15, 2019

சபரிமலை வரும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க மாட்டோம்: கேரள தேவசம்போர்டு

திருப்தி தேசாய் போன்ற ஆர்வலர்கள் சபரிமலையை புரட்சி செய்யும் இடமாக பார்க்கக்கூடாது.

சபரிமலை வரும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க மாட்டோம்: கேரள தேவசம்போர்டு

சபரிமலைக்கு வருகை தரும் எந்தவொரு பெண்ணிற்கும் மாநில அரசு பாதுகாப்பு தராது

சபரிமலைக்கு வருகை தரும் எந்தவொரு பெண்ணிற்கும் மாநில அரசு பாதுகாப்பு தராது என கேரள தேவசம் போர்டு அமைச்சர் சுரேந்திரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபட அனுமதித்து உச்சநீதிமன்றம் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்புக்கு எதிராக தொடரப்பட்ட 65 சீராய்வு மனுக்கள் மீதான வழக்கில் நேற்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகளில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் கன்வில்கர், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் இந்த வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்தனர். 

தொடர்ந்து, சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் கடந்த ஆண்டு உத்தரவுக்கு தற்போதைக்கு தடை விதிக்கப்படவில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 

இந்தநிலையில், சபரிமலைக்கு வருகை தரும் எந்தவொரு பெண்ணிற்கும் மாநில அரசு பாதுகாப்பு தராது கேரள தேவசம் போர்டு அமைச்சர் சுரேந்திரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

மேலும் அவர் கூறும்போது, திருப்தி தேசாய் போன்ற ஆர்வலர்கள் சபரிமலையை புரட்சி செய்யும் இடமாக பார்க்கக்கூடாது. அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு தேவையென்றால், உச்சநீதிமன்றம் சென்று அனுமதி வாங்கி வரவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

.