This Article is From Nov 21, 2018

புயல் பாதிப்பிலிருந்து மீண்டு வரும் தமிழக மக்களுக்கு துணை நிற்போம்: கேரள அரசு

கடந்த 15 ம் தேதி கரையை கடந்த கஜா புயல் நாகப்பட்டினம், காரைக்கால், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த புயலால் 50–க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்

Advertisement
தெற்கு Posted by

கஜா புயல் பாதிப்பிலிருந்து மீண்டு வரும் தமிழக மக்களுக்கு துணை நிற்போம் என கேரள முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார்.

கடந்த 15 ம் தேதி கரையை கடந்த கஜா புயல் நாகப்பட்டினம், காரைக்கால், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த புயலால் 50–க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்துள்ளனர்.

புயல் பாதிப்பால் பல இடங்களில் வீடுகள், பயிர்கள் சேதமடைந்தன. வாழை, தென்னை உள்ளிட்ட மரங்கள் முறிந்து விழுந்தன. மின்சார கம்பங்களும் விழுந்து கிடக்கிறது. பாதிப்புக்குள்ளான பகுதிகளில் மீட்பு மற்றும் புனரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழக அரசு சார்பில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புயல் நிவாரணப் பணிகளுக்காக தமிழக அரசு முதல் கட்டமாக ரூபாய் ஆயிரம் கோடியை விடுவித்துள்ளது.

இருப்பினும் புயல் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு பொதுமக்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்யலாம் என்று முதல்வா் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் உதவி செய்வதற்கான விவரங்களையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பில் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

Advertisement

இந்நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது அலுவலக ட்விட்டர் பதிவில், கஜா புயல் பாதிப்பில் இருந்து மீண்டு வரும் தமிழக மக்களுக்கு கேரளா துணை நிற்கும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிதண்ணீர், மெழுவர்த்திகள், போர்வைகள், உடைகள், உணவுகள் உள்ளிட்டவை திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். மேலும் கேரள பேரிடர் மேலாண்மை வாரியம் மீட்பு பணிகளுக்கு உறுதுணையாக நிற்கும் என்று அவர் கூறியுள்ளார்.
 

Advertisement