எடப்பாடி அரசு அதன் நம்பகத்தன்மையை நிரூபித்துள்ளதாக வளர்மதி கூறியுள்ளார்.
Chennai: 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை அதிமுகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இதுகுறித்து அதிமுக செய்திதொடர்பாளர் வளர்மதி பிடிஐ செய்தியாளர்களிடம் கூறும்போது,
எடப்பாடி பழனிசாமி அரசு அதன் நம்பகத்தன்மையை நிரூபித்துள்ளது. மேலும், இடைத்தேர்தல் நடக்கவுள்ள 20 தொகுதிகளிலும் நிச்சயம் அதிமுக வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யப்பட்ட தொகுதிகள் தவிர்த்து, மரணமடைந்த திமுக தலைவர் மு.கருணாநிதி மற்றும் அதிமுக எம்.எல்.ஏ., ஏ.கே.போஸ் உள்ளிட்டோர் தொகுதிகளான திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகள் காலியாக உள்ளன.
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் வழக்கில், இன்று நீதிபதி எம்.சத்தியநாரயணின் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அளித்த அதே தீர்ப்பை வழங்கியதன் மூலம் எடப்பாடி அரசுக்கு பெரும் நிவாரணம் கிடைத்துள்ளது.
முதல்வர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி ஆளுநரிடம் மனு அளித்ததால், கட்சி தாவல் சட்டத்தின் கீழ் கடந்த செப்.18ல் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.