Coronavirus in Chennai: "அணியத் தவறினால், அவர்களின் அவசரகால போக்குவரத்து அனுமதிச் சீட்டு ரத்து செய்யப்படுவதோடு..."
ஹைலைட்ஸ்
- சென்னையில் 205 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
- அதிகபட்சமாக ராயபுரத்தில் 63 பேருக்கு கொரோனா இருக்கிறது.
- சென்னையில் கொரோனா முன்னெச்சரிக்கை கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன
Coronavirus in Chennai: சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால், இனி மக்கள் முகக் கவசம் அணிவதைக் கட்டாயமாக்கியுள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி, அறிக்கை மூலம் தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “மேலும் கொரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுக்க பொது மக்கள் வெளியே செல்லும் பொழுது கட்டாயமாக முகக் கவசம் அணிய வேண்டும் என்று தொற்று நோய் தடுப்பு மற்றும் பொதுச் சுகாதார சட்டங்களின் அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு அணியத் தவறினால், அவர்களின் அவசரக்கால போக்குவரத்து அனுமதிச் சீட்டு ரத்து செய்யப்படுவதோடு, மூன்று மாதங்களுக்கு அவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும்.
இத்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது,” என்று குறிப்பிட்டுள்ளது.