தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது-
தமிழகத்தின் தெற்கு கடலோர மாவட்டங்களில் நாளையும் நாளை மறுதினமும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது. இதனைத் தவிர்த்து தமிழகம் மற்றும் புதுவையின் மற்ற இடங்களில் வறண்ட வானிலையே காணப்படும்.
இதற்கு அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் வறண்ட வானிலையே காணப்படும்.
சென்னையைப் பொறுத்தளவில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பகுதியளவு மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகாலை நேரத்தில் பனிப்பொழிவு இருக்கும்.
சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியசாகவும் இருக்கும்.
ஜனவரி மாதத்தில் இதுவரையில் அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 52.2 மி.மீ. மழை பெய்துள்ளது. ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் மழைப்பொழிவே இல்லை.
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.