This Article is From Jun 20, 2020

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தென்மேற்கு பருவமழை கேரளாவில் தீவிரம் அடைந்து வருவதால், அதையொட்டியுள்ள தமிழக மாவட்டங்களிலும் மழை காணப்படுகிறது.  இந்த நிலையில் தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னையை பொருத்தளவில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.  ஒரு  சில இடங்களில் தூரல் விழுவதற்கான வாய்ப்புள்ளது. 

ஹைலைட்ஸ்

  • கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கலில் கனமழை பெய்வததற்கு வாய்ப்புள்ளது
  • சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்
  • மதுரை, திருச்சி, சேலம், நாகை மாவட்டங்களில் வெயில் அதிகமாக இருக்கும்

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மாநிலம் முழுவதும் கோடை வெயில் மக்கள் சுட்டெரித்து  வருகிறது. கொரோனா பாதிப்பு ஒருபக்கம், கோடை வெயிலின் தாக்குதல் இன்னொரு பக்கம் என மக்கள் தவித்துப் போயுள்ளனர். 

இதற்கிடையே, தமிழகத்தில் ஆங்காங்கே வெப்பச் சலனம் காரணமாக சாரல் மழை பெய்து, வெப்பத்தை தணித்து வருகிறது.

தென்மேற்கு பருவமழை கேரளாவில் தீவிரம் அடைந்து வருவதால், அதையொட்டியுள்ள தமிழக மாவட்டங்களிலும் மழை காணப்படுகிறது.  இந்த நிலையில் தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு அதிகம் என  வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

சென்னையை பொருத்தளவில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.  ஒரு  சில இடங்களில் தூரல் விழுவதற்கான வாய்ப்புள்ளது. 

மதுரை, திருச்சி, சேலம், வேலூர், நாகை மற்றும் புதுச்சேரியில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் பதிவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.  

.