சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். கனமழை நிலவரம் குறித்து தகவல் தெரிவித்த பாலச்சந்திரன், தென் கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகியுள்ளதாகவும், அது ஒடிசா அருகே கரையை கடப்பதற்கு வாய்ப்புள்ளதாகவும் கூறினார்.
இதனால், தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்த பாலச்சந்திரன், அரபிக் கடல் பகுதியில் வரும் 12-ம் தேதி வரை மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தினார்.
முன்னதாக குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அரபிக்கடலின் தென் கிழக்கு பகுதியில் உருவாகி இருப்பதாகவும், திங்கள் வரை கனமழை பெய்யக் கூடும் என்றும் ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டிருந்தது. அதிலும் குறிப்பாக நீலகிரி, கோவை, தேனி, கன்னியாகுமரியில் மிக கனமழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.
இதனால் தமிழகத்தில் ஓர் பதற்றமான சூழல் காணப்பட்டது. இந்த நிலையில், ரெட் அலெர்ட் திரும்பப் பெற்றுக் கொள்வதாக வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)