This Article is From Jun 04, 2019

தமிழகத்தில் வெயில் நீடிக்கிறது! 3 டிகிரி செல்சியஸ் வரை அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு!!

கோடைகாலம் முடிந்த நிலையிலும் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறையவில்லை. இன்னும் 2 நாட்களில் கேரளாவில் பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் வெயில் நீடிக்கிறது! 3 டிகிரி செல்சியஸ் வரை அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு!!

தமிழகத்தில் அனல் காற்று வீசுவதற்கான வாய்ப்புகள் குறைந்துள்ளன.

தமிழகத்தில் கோடை காலம் முடிந்த நிலையிலும் வெயில் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உள் மாவட்டங்களை பொருத்தளவில் வெப்பம் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. 

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது-
குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 40 கிலோ மீட்டர் வரையிலும் காற்று வீச வாய்ப்புள்ளது. தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான வரையில் மழை பெய்யக்கூடும். 

நெல்லை, கோவை, புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, தண்டுக்கல், திருவண்ணாமலை, சேலம், ஈரோடு உள்பட 14 மாவட்டங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பகள் உள்ளன. சென்னையை பொருத்தளவில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 3 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பம் அதிகரிக்கக்கூடும். 

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பருவமழை நாளை மறுதினம் தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறையாத நிலையில், பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. 

.