ஹைலைட்ஸ்
- கீரைகளை சாப்பிடுவதால் உடல் எடை குறைகிறது.
- எலும்புகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க கீரைகளை சாப்பிடலாம்.
- குடல் மற்றும் செரிமான மண்டலம் சீராக இயங்க கீரைகளை சாப்பிடலாம்.
உடல் எடை குறைக்க எத்தனையோ டயட் வழிமுறைகள் இருக்கிறது. உடல் எடை குறைக்க நாம் சாப்பிடக்கூடிய உணவுகளால் உடலில் சேரக்கூடிய கலோரிகளை எரிக்க வேண்டும். சரியான உணவு பழக்கம் மற்றும் உடற்பயிற்சி ஆகிய இரண்டால் மட்டுமே உடல் எடை குறையும். அப்படி உடல் எடையை விரைவில் குறைக்க கீரை சாப்பிடலாம். கீரையில் நார்ச்சத்து இருப்பதால் உடல் எடை குறைக்க உதவுகிறது. உடல் பருமனான பெண்கள் தினமும் 5 கிராம் கீரையை சாப்பிட்டு வந்தால் மூன்றே மாதத்தில் 43 சதவிகிதம் உடல் எடை குறையும். ஒரு கப் கீரையில் 7 கலோரிகள் இருப்பதால் தினமும் சிறிதளவு கீரை சாப்பிட்டு வரலாம். கீரையின் மேலும் சில நன்மைகள் குறித்து பார்ப்போம்.
ஊட்டச்சத்துக்கள்:
அனைத்து வகையான கீரைகளிலும் புரதம், கால்சியம், இரும்புச் சத்து, மக்னீஷியம், பொட்டாஷியம் மற்றும் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. தினசரி உணவில் கட்டாயமாக கீரையை சேர்த்து கொள்ள வேண்டும். கீரையை சாலட்டுடனும் சேர்த்து சாப்பிடலாம்.
உயர் இரத்த அழுத்தம்:
இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உடலுக்கு பொட்டாஷியம் கட்டாயம் தேவை. கீரையில் இருக்கக்கூடிய பொட்டாஷியம் அளவு உடலில் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. இரத்த அழுத்தத்தை அதிகரிக்கக்கூடிய சோடியத்தின் அளவை உடலில் குறைக்க கீரையை சாப்பிடலாம்.
செரிமானம்:
செரிமான மண்டலத்திற்கு நார்ச்சத்து மிகவும் முக்கியமான ஒன்று. நார்ச்சத்து மிகுந்த உணவை அடிக்கடி சாப்பிடுவதால் குடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தினமும் ஒரு கப் கீரை சாப்பிட்டால் செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும்.
எலும்புகளின் ஆரோக்கியம்:
வைட்டமின் கே மற்றும் கால்சியம் சத்து எலும்புகளை உறுதியாக வைக்க உதவுகிறது. கீரைகளை தொடர்ச்சியாக சாப்பிடும்போது எலும்புகள் வலுவாகிறது.