அயோத்தி பிராதன வழக்கின் மறு விசாரணை அக்டோபர்-29ஆம் தேதி நடைபெற உள்ளது
Lucknow: முஸ்லீம்களுக்கு நமாஸ் செய்ய மசூதி அவசியமா என்பது குறித்தான வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது தொடர்பான வழக்கில் கடந்த 1994 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம், நமாஸ் செய்ய முஸ்லீம்களுக்கு மசூதி அவசியம் இல்லை. நமாஸ் என்பது எந்த இடத்தில் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். எனவே, மசூதி இருக்கும் ஓர் இடத்தை அரசு தேவைப்பட்டால் கையகப்படுத்தலாம் என்று தீர்ப்பளித்துள்ளது.
மேலும், அயோத்தி பிராதன வழக்கின் மறு விசாரணை அக்டோபர்-29ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், “முஸ்லீம்களுக்கு நமாஸ் அவசியமா என்பது குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன். மேலும், அயோத்தி வழக்கின் மறுவிசாரணை தீர்ப்புக்காக காத்திருக்கிறேன். விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்