This Article is From Nov 14, 2018

2019 தேர்தலில் திமுகவுடன் இணைந்து பணியாற்ற முடிவு! - சீதாராம் யெச்சூரி

2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்துவது குறித்தும் கூட்டணி குறித்தும் நீண்ட நேர பேச்சுவார்த்தை நடத்தினார்.

2019 தேர்தலில் திமுகவுடன் இணைந்து பணியாற்ற முடிவு! - சீதாராம் யெச்சூரி

சென்னையில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி நேரில் சந்தித்தார்.

Chennai:

பாஜகவை வீழ்த்தி, மதச்சார்பற்ற மெகா கூட்டணி அமைக்கும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீதாராம் யெச்சூரி, தமிழகத்தில் திமுகவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவிப்பதாக தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் வரவுள்ள தேர்தல்களில் திமுகவுடன் நாங்கள் துணை நிற்க முடிவு செய்துள்ளோம்.

இந்தியா பாதுகாப்படைய வேண்டும் என்பதற்காகவும், ஒன்றினைந்த தேசப்பற்றுள்ள மதச்சார்பற்ற அரசியல் கட்சிகள் தீர்மானித்து வருவதாகவும் அவர் கூறினார். 2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்துவது குறித்தும் கூட்டணி குறித்து மு.க.ஸ்டாலினுடன் நீண்ட நேர பேச்சுவார்த்தை நடத்தியதாக அவர் தெரிவித்தார்.

தேசிய அளவில் பெரும் கூட்டணி உருவாகிறதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது,

ஒன்றுபட்ட நோக்கத்திற்காக அரசியல் கட்சிகள் தங்கள் வேறுபாடுகளை இரண்டாக உடைக்க முடியும். தலைவர்களின் விருப்பத்திற்கு மேலாக, இந்தியாவை காப்பாற்றுவதற்கு, மக்களே தலைவர்கள் ஒன்றாக இணைய வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். அது தற்போது நிகழ்ந்து வருகிறது. அதற்கான முதல் நிலை, மாநில அளவிலான கூட்டணிகளை உருவாக்குவதாகும் என்று அவர் கூறினார்.

நரேந்திர மோடி அரசின் தவறான கொள்கைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும். இந்திய அரசமைப்பு பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம். இந்தியாவின் ஒற்றுமையும், கெளரவமும் மிக முக்கியம். பாஜக ஆட்சி வீழ்த்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம் என்று அவர் கூறினார்.

.