என் கல்யாணங்களால்தான் நீங்கள் 2 ஆண்டுகள் சிறையில் இருந்தீர்களோ..? - Pawan Kalyan (File Photo)
Vijaywada, Andhra Pradesh: ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி (Jagan Mohan Reddy) சில நாட்களுக்கு முன்னர் ஜன சேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாணைத் (Pawan Kalyan) தனிப்பட்ட ரீதியில் விமர்சித்திருந்தார். அதற்கு பவன் கல்யாண், பதிலடி கொடுத்துள்ளார்.
ஆந்திர பிரதேசத்தில் (Andhra Pradesh) இருக்கும் அனைத்து அரசுப் பள்ளிகளிலும், ஆங்கில வழிக் கல்வியைக் கட்டாயமாக்க அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நடவடிக்கை எடுத்துள்ளார். அதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கவே, அவர்களைத் தாக்கிப் பேசியுள்ளார் ஜெகன்.
“சந்திரபாபு நாயுடு சார், உங்கள் மகன் எந்தப் பள்ளியில் கல்வி பயின்றார். உங்கள் பேரக் குழந்தை நாளை எந்தப் பள்ளியில் பயிலும். வெங்கையா நாயுடு, உங்கள் மகன் மற்றும் பேரக் குழந்தைகள் எந்தப் பள்ளியில் படித்தார்கள்,” எனக் கேள்வி எழுப்பியுள்ளார் ஜெகன்.
அதேபோல பவன் கல்யாணுக்கு ஜெகன், “பவன் கல்யாண் சார், உங்களுக்கு 3 மனைவிகள் இருக்கிறார்கள். 4, 5 குழந்தைகள் இருக்கிறார்கள். அனைவரும் எந்த பள்ளிகளில் படிக்கிறார்கள்,” என்றார்.
இதனால் கொதிப்படைந்த பவன் கல்யாண், “திரும்ப திரும்ப, நான் 3 திருமணங்கள் செய்ததைக் குறிப்பிட்டு வருகிறீர்கள் ஜெகன். எனது திருமணங்களால் உங்களுக்கு என்னப் பிரச்னை. என் கல்யாணங்களால்தான் நீங்கள் 2 ஆண்டுகள் சிறையில் இருந்தீர்களோ..?,” எனக் கடுகடுத்துள்ளார். முன்னதாக ஜெகன், சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டதைக் குறிப்பிட்டுப் பேசியுள்ளார் பவன்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)