This Article is From Jun 30, 2020

மேற்கு வங்கத்தில் ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்த கொரோனா பாதிப்பு! மாநில அரசு அதிர்ச்சி

உயிரிழந்தவர்களில் 2 பேர் வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தையும், 2 பேர் ஹவ்ராவையும் சேர்ந்தவர்கள்.  இதேபோன்று ஹூக்ளி, பங்குரா,  பிர்பூம் மற்றும் டார்ஜிலிங்கை  சேர்ந்த தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர். 

Advertisement
இந்தியா

கடந்த 24 மணி நேரத்தில் 411 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளார்கள்.  

Highlights

  • மேற்கு வங்கத்தில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு உயர்ந்ததால் அதிர்ச்சி
  • மாநிலத்தில் மொத்த பாதிப்பு 18 ஆயிரத்து 559 ஆக உயர்ந்துள்ளது.
  • கடந்த 24 மணி நேரத்தில் 411 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளார்கள்.
Kolkata:

மேற்கு வங்கத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 652 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாநில அரசு அதிர்ச்சியடைந்துள்ளது. 

மாநிலத்தில் மொத்த பாதிப்பு 18 ஆயிரத்து 559 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதித்த 15 பேர் உயிரிழந்தார்கள். இதனால் மொத்த பாதிப்பு 668 ஆக அதிகரித்துள்ளது. 

உயிரிழந்த 15 பேரில் 14 பேருக்கு ஏற்கனவே பல  பாதிப்புகள் இருந்திருக்கின்றன.  ஒருவர் எந்தவித முன் பாதிப்பும் இல்லாமல் உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்தவர்களில் 2 பேர் வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தையும், 2 பேர் ஹவ்ராவையும் சேர்ந்தவர்கள்.  இதேபோன்று ஹூக்ளி, பங்குரா,  பிர்பூம் மற்றும் டார்ஜிலிங்கை  சேர்ந்த தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர். 

Advertisement

கடந்த 24 மணி நேரத்தில் 411 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளார்கள்.  

மேற்கு வங்கத்தில் கொரோனாவில் இருந்து மீளுவோர் 65.35 சதவீதமாக இருக்கின்றனர். கடந்த  24 மணி நேரத்தில் 9 ஆயிரத்து 619 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement
Advertisement