This Article is From Jan 03, 2020

மோடி இந்தியாவின் பிரதமரா அல்லது பாக். தூதரா? : மம்தா பானர்ஜி

சிலிகுரியில் நடைபெற்ற குடியுரிமை எதிர்ப்பு சட்டப் பேரணியில் உரையாற்றிய மம்தா பானர்ஜி “சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் கடந்த பின்னரும் மக்கள் தங்கள் தேசிய உணர்வை நிரூபிக்க வேண்டி இருப்பது வெட்கக் கேடானது” என்றார்.

மோடி இந்தியாவின் பிரதமரா அல்லது பாக். தூதரா? : மம்தா பானர்ஜி

நீங்கள் இந்தியாவின் பிரதமரா அல்லது பாகிஸ்தான் தூதரா? -மம்தா பானர்ஜி

Siliguri:

இன்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி  பிரதமர் மோடி ஏன் இந்தியாவை பாகிஸ்தானுடன் அடிக்கடி ஒப்பிடுகிறார் என்று கேள்வி எழுப்பியுள்ளார்

சிலிகுரியில் நடைபெற்ற குடியுரிமை எதிர்ப்பு சட்டப் பேரணியில் உரையாற்றிய மம்தா பானர்ஜி “சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் கடந்த பின்னரும் மக்கள் தங்கள் தேசிய உணர்வை நிரூபிக்க வேண்டி இருப்பது வெட்கக் கேடானது” என்றார்.

“இந்தியா ஒரு வளமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் கொண்ட ஒரு பெரியநாடு. பிரதமர் ஏன் நமது நாட்டை பாகிஸ்தானுடன் ஒப்பிடுகிறார்? நீங்கள் இந்தியாவின் பிரதமரா அல்லது பாகிஸ்தான் தூதரா? ஒவ்வொரு பிரச்சினையிலும் நீங்கள் ஏன் பாகிஸ்தானைக் குறிப்பிடுகிறீர்கள்?” என்று முதல்வர் கூறினார்.

தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்துவதில் பாஜக “வேண்டுமென்றே” குழப்பத்தை ஏற்படுத்துவதாக அவர் குற்றம் சாட்டினார். அதன் தலைவர்கள் இந்த விவகாரத்தில் முரண்பாடான அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்.

ஒருபுறம் என்.ஆர்.சி இருக்காது என்று பிரதமர் கூறுகிறார். ஆனால் மறுபுறும் மத்திய உள்துறை அமைச்சரும் பிற அமைச்சர்களும் இந்த பயிற்சி நாடு முழுவதும் நடத்தப்படும் என்று கூறியுள்ளனர்.

.