நண்பர்களே. அவர்கள் கொரோனா வைரஸால் இறந்திருந்தால் கூட அதை நாங்கள் ஏற்றிருப்போம் என்று கூறினார்
ஹைலைட்ஸ்
- டெல்லியில் இறந்தவர்கள் ஒன்றும் கொரோனா வைரசால் இறக்கவில்லை
- டெல்லியில் நடந்த அந்த வன்முறையை மறைக்கவே இந்த கொரோனா வைரஸ்
- நாங்கள் இந்த கொரோனா வைரஸ் நோய் பரவலை விரும்பவில்லை
Kolkata: கடந்த புதன் கிழமை அன்று ஒரு கூட்டத்தில் பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கொரோனா வைரஸ் பரவலை மிகப்படுத்துவதன் மூலம் டெல்லி வன்முறையிலிருந்து கவனத்தை திசை திருப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார். உலகம் முழுவதும் பரவிவரும் கொரோனா வைரஸ் குறித்து பலரும் கவலைப்படுகிறார்கள், ஏன் உலகமே கவலைப்படுகிறது. ஆனால் மக்கள் இதை கண்டு பீதி அடைய வேண்டாம். டெல்லியில் நடந்த அந்த வன்முறையை மறைக்கவே இந்த கொரோனா வைரஸ் பரவலை பல செய்தி நிறுவனங்கள் முன்னிறுத்துவதாக அவர் கூறினார்.
"நிச்சயமாக, நாங்கள் இந்த கொரோனா வைரஸ் நோய் பரவலை விரும்பவில்லை, ஆனால் டெல்லியில் இறந்தவர்கள் கொரோனா வைரஸால் இறக்கவில்லை. அவர்கள் பன்றிக் காய்ச்சல் அல்லது என்செபாலிடிஸ் எனப்படும் முளை சம்மந்தமான நோயின் காரணமாக இறக்கவில்லை, நண்பர்களே. அவர்கள் கொரோனா வைரஸால் இறந்திருந்தால் கூட அதை நாங்கள் ஏற்றிருப்போம் என்று கூறினார். ஆனால் மகிழ்ச்சியோடும் புன்னகை செய்த முகத்தோடும் சென்றவர்களை நீங்கள் தான் கொன்றீர்கள், "என்று அவர் கூறினார்.
கடந்த மாதம் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட மோதல்களில் 48 பேர் கொல்லப்பட்டனர். இந்த வன்முறைக்கு பாஜக தலைவர்களின் வெறுக்கத்தக்க பேச்சுக்களை குற்றம் சாட்டியுள்ளனர் விமர்சகர்கள். கடந்த ஆண்டு சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ்சால் உலகம் முழுவதும் 3,000 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இந்தியாவில் 16 இத்தாலிய சுற்றுலாப் பயணிகள் உட்பட 29 பேருக்கு கொரோனா நோய் தொற்று குறித்து சோதனை நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த வாரம் பங்கேற்று பேசிய பேரணியில் பங்கேற்ற பாஜகவின் ஆதரவாளர்கள், கொல்கத்தாவின் மையப்பகுதியில் காவல்துறை முன்னிலையில் "கோலி மரோ" (அவர்களை சுடு) என்று கோஷம் எழுப்பினர். இந்நிலையில் டெல்லி வன்முறைக்கு உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையின் கீழ் நீதி விசாரணை தொடங்கப்பட வேண்டும் என்று செல்வி பானர்ஜி கோரியுள்ளார். கடந்த வாரம், திருமதி பானர்ஜி டெல்லி வன்முறையை "அரசால் ஆதரவளிக்கப்பட்ட இனப்படுகொலை" என்று குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது, மேலும் "குஜராத் கலவரங்களின் மாதிரி" என்று தான் அழைத்ததை பிரதிபலிக்க பாஜக முயற்சிப்பதாகவும் அவர் கூறினார்.