தனது புகைப்படத்திற்கு பதில் நாய் புகைப்படம் வைத்து வந்துள்ள வாக்காளர் அட்டையை சுனில் கர்மாகர் கையில் வைத்துள்ளார்.
ஹைலைட்ஸ்
- திருத்தப்பட்டு வந்த வாக்காளர் அடையாள அட்டையை பார்த்து அதிர்ச்சி
- தனது புகைப்படத்திற்கு பதில் நாயின் புகைப்படம்
- மீண்டும் திருத்தி கொடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி
Murshidabad: மேற்குவங்கம் முர்ஷிதாபாத்தில் ராம்நகர் குடியிருப்பை சேர்ந்த ஒருவருக்கு நாய் புகைப்படம் வைத்து வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக சுனில் கர்மாகர் கூறும்போது, வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் செய்வதற்காக விண்ணப்பிருந்தேன். அப்போது, திருத்தப்பட்ட வாக்காளர் அடையாள அட்டையில் அவரது புகைப்படத்திற்கு பதில் நாய் புகைப்படம் இருந்துள்ளது.
நேற்றைய தினம் என்னை துளால் ஸ்மிர்தி பள்ளிக்கு வரச்சொன்னவர்கள் அங்கு எனக்கு இந்த வாக்காளர் அடையாள அட்டையை வழங்கினர். அங்கிருந்த அதிகாரி கையெழுத்திட்டு எனக்கு வழங்குகிறார். ஆனால், அவர் இந்த புகைப்படத்தை கவனிக்கவில்லை.
இது எனது கண்ணியத்துடன் விளையாடுகிறது. தொடர்ந்து, நான் தொகுதி மேம்பாட்டு அலுவலகத்திற்குச் சென்று இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்கக்கூடாது என்று கேட்டுக்கொள்வேன், "என்று அவர் கூறினார்.
இதுதொடர்பாக தொகுதி மேம்பாட்டு அதிகாரி கூறும்போது, இந்த புகைப்படம் ஏற்கனவே சரிசெய்யப்பட்டுவிட்டது. கர்மாகருக்கு திருத்தப்பட்ட புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என்று கூறினார்.
அவருக்கு வழங்கப்பட்டது திருத்தப்பட்ட இறுதி வாக்காளர் அட்டை அல்ல. அதில், எதேனும் தவறுகள் இருந்தால் மீண்டும் திருத்திக்கொள்ளலாம். ஆன்லைனில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் போது, நாயின் புகைப்படத்தை யாரேனும் கொடுத்திருக்கலாம். எனினும், அந்த புகைப்படம் ஏற்கனவே சரி செய்யப்பட்டுவிட்டது. அவருக்கு சரியான புகைப்படத்துடன் கூடியா இறுதி வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என்று அவர் கூறினார்.