This Article is From Oct 13, 2018

இயற்கை பேரிடரை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்: மம்தா பானர்ஜி

இயற்கை சீற்றங்களின் போது மக்களை எஸ்.எம்.எஸ் மூலம் எச்சரிக்கை செய்ய மேற்கு வங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது

இயற்கை பேரிடரை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்: மம்தா பானர்ஜி

மேற்கு வங்காளத்தில், வெள்ள முகாம் மற்றும் நிவாரண கிடங்குகள் கட்டப்பட்டுள்ளதாக மம்தா பானர்ஜி கூறியுள்ளார்

Kolkata:

இயற்கை பேரிடரை சமாளிக்க மேற்கு வங்காளத்தின் பல மாவட்டங்களில் வெள்ள முகாம் மற்றும் நிவாரண கிடங்குகள் கட்டப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி இன்று கூறினார்.

மாநில அரசாங்கம் இயற்கை சீற்றங்களின் போது மக்களை எஸ்.எம்.எஸ் மூலம் எச்சரிக்கை செய்ய மேற்கு வங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது என்று முதலமைச்சர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், இன்று உலக பேரிடர் குறைப்பு தினம். நமது அரசாங்கம் இயற்கை பேரிடரின் போது பொது மக்களை எஸ்.எம்.எஸ் மூலம் முன்னெச்சரிக்கை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெள்ள முகாம் மற்றும் நிவாரண கிடங்குகள் மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ளதாக கூறினார்.

சர்வதேச பேரிடர் குறைப்பு தினம் அக்.13ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இது இயற்கை பேரிடரிலிருந்து பாதுகாக்க மற்றும் தயார்படுத்தக் கூடிய விழிப்புணர்வு நாளாக கடைபிடிக்கப்படுகிறது.
 

.