நல்ல தரமான வெங்காயம் அதிக விலைக்கு விற்பனையாகிறது.
Kolkata: கேட்டாலே கண்ணீர் வரவைக்கும் வெங்காயத்தின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ. 150 வரைக்கும் விற்பனையாகிறது. நல்ல தரமான வெங்காயத்திற்கு இந்த அதிக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தரத்திற்கேற்ப விலைகள் வித்தியாசப்படுகின்றன.
நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை கடுமையாக அதிகரித்திருப்பதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மற்ற காய்கறிகளைப் போன்று, வெங்காயத்தை தவிர்த்துவிட்ட சமையல் செய்ய முடியாது என்பதால் மக்கள் தர்ம சங்கடத்திற்கு ஆளாகியுள்ளனர்.
விலையேற்றத்தை சமாளிக்க மத்திய அரசு வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்யும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக எகிப்து நாட்டிலிருந்து வெங்காயங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.
மகாராஷ்டிராவின் நாசிக்கில் 40 கிலே கொண்ட வெங்காய மூட்டை, இன்று ரூ. 5400-க்கு விற்பனையாகிறது. இதனை சில்லரை வியாபாரிகள் கிலோ ஒன்றுக்கு ரூ. 150 வரைக்கும் விற்பனை செய்கின்றனர்.
வெங்காய விலையேற்றம் குறித்து மேற்கு வங்க அதிகாரிகள் கூறுகையில், 'வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு தாமதமாக நடவடிக்கை எடுத்திருக்கிறது. ஒரு மாதத்திற்கு முன்பாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தால் நிலைமை மோசம் அடைந்திருக்காது.
எங்களை அனுமதித்திருந்தால் நாங்கள் இலங்கையிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்திருப்போம். அந்த வெங்காயம் கிலோ ஒன்றுக்கு ரூ. 55-க்கு இங்கு விற்பனை செய்யப்பட்டிருக்கும்.' என்றனர்.