This Article is From Jun 08, 2020

தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் மழை தொடரும்: முழு விவரம் உள்ளே!

கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் பகுதியில் அதிகபட்சமாக 6 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது

தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் மழை தொடரும்: முழு விவரம் உள்ளே!

சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

தமிழகத்தில் தென் மேற்குப் பருவமழைக் காலம் நிலவி வருவதனால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சென்னை மண்டலம் தகவல் தெரிவித்துள்ளது.

வானிலை மையம், ‘தமிழகத்தில் தென்மேற்குப் பருவக் காற்று மற்றும் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழையும், ஏறைய பகுதிகள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் பகுதியில் அதிகபட்சமாக 6 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. அதைத் தொடர்ந்து கன்னியாகுமரியின் மைலாடி மற்றும் புதுக்கோட்டையின் தலா பகுதிகளில் தலா 4 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. 

சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகப்பட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸும் இருக்கும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

.