This Article is From Aug 09, 2019

கடந்த 3 நாட்களில் நீலகிரி, அவலாஞ்சியில் 213 செ.மீ மழை; அடுத்து என்ன?- ‘தமிழ்நாடு வெதர்மேன்’ அப்டேட்!

"ஆகஸ்ட் மாதத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கோயம்புத்தூரில் மழை பெய்துள்ளது"

கடந்த 3 நாட்களில் நீலகிரி, அவலாஞ்சியில் 213 செ.மீ மழை; அடுத்து என்ன?- ‘தமிழ்நாடு வெதர்மேன்’ அப்டேட்!

“கடந்த 24 மணி நேரத்தில் அவலாஞ்சியில் பெய்துள்ள மழையானது வெறுமனே தமிழக வரலாற்றில் முதன்முறையாக நடந்த சம்பவம் அல்ல. தென்னிந்தியாவிலேயே இப்படிபட்ட மழை பெய்ததில்லை"

தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிக்கு அருகில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் அவலாஞ்சியில் கடந்த 3 நாட்களில் மட்டும் 213 சென்டீ மீட்டர் மழைக்கு மேல் பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அங்கு 91 சென்டீ மீட்டர் மழை பெய்துள்ளது. தமிழக வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கான மழை இது என்று ‘தமிழ்நாடு வெதர்மேன்' பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர், “கடந்த 24 மணி நேரத்தில் அவலாஞ்சியில் பெய்துள்ள மழையானது வெறுமனே தமிழக வரலாற்றில் முதன்முறையாக நடந்த சம்பவம் அல்ல. தென்னிந்தியாவிலேயே இப்படிபட்ட மழை பெய்ததில்லை. அவலாஞ்சியைத் தொடர்ந்து கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, பார்சன்ஸ் பள்ளத்தாக்கில் 60 சென்டீ மீட்டர் மழையும், முக்கூர்த்தியில் 49 சென்டீ மீட்டர் மழையும், மேல் பவானியில் 45 சென்டீ மீட்டர் மழையும் பொழிந்துள்ளது. 

6bhme0no

ஆகஸ்ட் மாதத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கோயம்புத்தூரில் மழை பெய்துள்ளது. பொள்ளாச்சியில் மட்டும் 160 மில்லி மீட்டர் மழை பொழிந்துள்ளது. அதைத் தவிர கோவை மாவட்டத்தின் சின்னக்கள்ளர் பகுதியில் 372 மில்லி மீட்டர் மழையும், வால்பாறை வட்டத்துக்கு உட்பட்ட பெரியகள்ளர்பகுதியில் 355 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது. 

அதேபோல திரூப்பூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துள்ளது” என்று கூறியுள்ளார்.

முன்னதாக அவர், “கேரளா, நீலகிரி மற்றும் வால்பாறை பகுதிகளில் தொடர்ந்து மிகவும் கனமழை பெய்து வருகிறது. எங்கு போய் முடியப் போகிறது என்று தெரியவில்லை. மிகவும் குறைவான மழை பொழிவைப் பெறும் ஊட்டி, கூனூர், கோவை நகரம் உள்ளிட்ட பகுதிகளில் கூட கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவையின் பீளமேடு பகுதி மிகவும் வறண்ட இடமாகும். அங்கு கூட 73 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. 

db2vmpig

கேரளாவிலும் மழை தொடரும். மல்லப்புரம், திருச்சூர், கோழிக்கோடு, வயநாடு உள்ளிட்ட பகுதிகள் தொடர்ந்து கனமழை பெரும். இன்றும் நாளையும் மிக கனமழை பெய்யும். 

இதேபோல மழை தொடருமேயானால், நிலைமை மோசமடையும். தாழ்வான பகுதிகளில் இருப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்வது நல்லது” என்று தெரிவித்தார். 

.