Read in English
This Article is From Dec 04, 2019

திமிங்கலத்தின் வயிற்றில் 100கிலோ பிளாஸ்டிக் குப்பைகள் : கடல் மாசுபாட்டினால் பலியான சோகம்

அனைத்து பொருட்களும் வயிற்றில் பெரிய பந்து போல் அடைந்து காணப்பட்டன. வயிற்றில் இந்த அளவுக்கு பிளாஸ்டிக் இருப்பது மிகவும் கொடுமையானது. கடல் குப்பைகளினால் ஏற்படும் ஆபத்தினை மீண்டும் நிரூபித்துள்ளது என்று விசாரணை அமைப்பு ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளது.

Advertisement
விசித்திரம் Edited by

திமிங்கலத்தின் வயிற்றில் கயிறு மூட்டைகள், பிளாஸ்டிக் கப், பைகள், கையுரைகள் எனப் பலவும் காணப்பட்டன.

ஸ்காட்லாந்து நாட்டில் ஹாரிஸ் தீவில் 20 டன் எடையுள்ள திமிங்கலம் இறந்து கிடந்ததாக பிபிசி தெரிவித்துள்ளது. இறந்து கிடந்த திமிங்கலத்தின் வயிற்றில் கயிறு மூட்டைகள், பிளாஸ்டிக் கப், பைகள், கையுரைகள் மற்றும் மீன்பிடி வலைகள் ஆகியவை இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. கடல் மாசுபாட்டின் பிரச்சினையை எடுத்துக்காட்டுவதாக இது அமைந்ததுள்ளது.

“ குறிப்பாக மீன் பிடி வலைகள் மற்றும் குப்பைகளை அதன் வயிற்றில் பார்த்தபோது மிகவும் வருத்தமாக இருந்தது.” என்று  அங்கு வசிக்கும் டான் பாரி என்பவர் பிபிசியிடம் கூறியிருந்தார். 

திமிங்கலங்கள் மற்றும் டால்பின்களின் இறப்பு குறித்து விசாரிக்கும் ஸ்காட்டிஷ் மரைன் அனிமல் ஸ்ட்ராண்டிக் ஸ்கீம் (SMASS) விசாரித்து வருகிறது. திமிங்கலத்தின் புகைப்படங்கள் பேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டது. திமிங்கலத்தை உடற்கூராய்வு செய்து பார்த்ததில் திமிங்கலத்தின் வயிற்றில் சுமார் 100 கிலோ கடல் குப்பைகள் இருப்பது தெரியவந்தது. 

Advertisement

அனைத்து பொருட்களும் வயிற்றில் பெரிய பந்து போல் அடைந்து காணப்பட்டன. வயிற்றில் இந்த அளவுக்கு பிளாஸ்டிக் இருப்பது மிகவும் கொடுமையானது. கடல் குப்பைகளினால் ஏற்படும் ஆபத்தினை மீண்டும் நிரூபித்துள்ளது என்று  விசாரணை அமைப்பு ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளது. 

இந்த புகைப்படம் இணையத்தில் வெகுவாக பரவியது. 12,000க்கும் மேற்பட்ட முறை பகிரப்பட்டுள்ளது. திமிங்கலம் கடற்கரையில் புதைக்கப்பட்டதாக லைவ் சயின்ஸ் தெரிவித்துள்ளது.

Advertisement

சில நாட்களுக்கு முன் குட்டி சீல் ஒன்று கடற்கரையோரத்தில் ஸ்டார்பக்ஸ் பாட்டிலுடன் விளையாடும் புகைப்படம் வைரலாகி விட்டது. 104 குட்டி ஆமைகளின் வயிற்றில் பிளாஸ்டிக்குகள் கண்டுபிடிக்கப்பட்டன. 

Advertisement