Amazon CEO Jeff Bezos: இந்தியாவின் சிறிய வியாபரங்களில் சுமார் 1 பில்லியன் டாலர் முதலீடு செய்யப் போவதாகவும் அறிவித்துள்ளார் பெசோஸ்.
New Delhi: Amazon CEO Jeff Bezos: உலகின் நம்பர் 1 பணக்காரரும், அமேசான் இணைய வர்த்தக நிறுவனத்தின் உரிமையாளருமான ஜெஃப் பெசோஸ் இன்று இந்தியாவுக்கு வந்துள்ளார். அவர் தலைநகர் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பேசும்போது, “21 ஆம் நூற்றாண்டு இந்தியாவினுடையதாக இருக்கும்,” என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவின் சிறிய வியாபரங்களில் சுமார் 1 பில்லியன் டாலர் முதலீடு செய்யப் போவதாகவும் அறிவித்துள்ளார் பெசோஸ். இந்தியாவுக்கு 3 நாட்கள் சுற்றுப் பயணத்திற்கு வந்துள்ளார் பெசோஸ்.
“இங்கே இருக்கும் பன்மைத்துவம், இதன் ஆற்றல், இதன் வளர்ச்சி… இந்த நாடு உண்மையில் மிக ஸ்பெஷலானது. இது ஒரு ஜனநாயக நாடு என்பது கூடுதல் சிறப்பாகும். 2025 ஆம் ஆண்டுக்குள் ‘மேக் இன் இந்தியா' திட்டம் மூலம் 10 பில்லியன் டாலர்கள் அளவிலான பொருட்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்ய அமேசான் முயலும்,” என்று Smbhav மாநாடு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார் பெசோஸ்.
ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களான அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட்டின் வியாபரங்கள் குறித்து இந்தியாவின் போட்டிகளுக்கான கமிஷன், விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ள நிலையில், பெசோஸின் இந்தியப் பயணமும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேபோல அனைத்திருந்த வணிகர்கள் சங்கத்தின், பொதுச் செயலாளரான பிரவீன் கந்தேல்வால், “இந்திய ஆன்லைன் வர்த்தக சந்தையானது அனைத்துவித கட்டுப்பாடுகள், ஆரோக்கியமற்ற செயல்பாடுகள், நெறிமுறைகளுக்கு உட்படுடாத வியாபாரங்களில் இருந்து விடுபட வேண்டும் என்று நினைக்கிறோம். அரசு இது குறித்து நடவடிக்கை எடுக்கும் வரை எங்கள் தேசிய அளவிலான போராட்டங்கள் தொடரும்,” என்று தெரிவித்துள்ளார். அனைத்திருந்திய வணிகர்கள் சங்கத்தைச் சேர்ந்த பல லடசம் வணிகர்கள், நாட்டில் இருக்கும் 300 நகரங்களில், பெசோஸின் வருகைக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்தியாவின் உள் நாட்டுச் சந்தையை அமேசான் சீர்குலைக்கிறது என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அமேசான், இந்தியாவில் 5.5 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய உள்ளதை உறுதி செய்துள்ளது. இந்தியாவை மிக முக்கியமான வளரும் சந்தையாக அமேசான் பார்க்கிறது.