This Article is From Aug 01, 2018

சுதந்தர தின உரைக்கான கருத்துக்களை பகிர்ந்து கொள்ளமாறு பிரதமர் மோடி அழைப்பு

சுதந்தர தின நிகழ்ச்சியின் சிறப்பு உரைக்கான எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்

சுதந்தர தின உரைக்கான கருத்துக்களை பகிர்ந்து கொள்ளமாறு பிரதமர் மோடி அழைப்பு
New Delhi:

புதுடில்லி: வரும் ஆகஸ்டு மாதம் 15 ஆம் தேதி நடைப்பெற உள்ள சுதந்தர தின நிகழ்ச்சியின் சிறப்பு உரைக்கான எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று காலை, ட்விட்டரில் பதிவிட்ட பிரதமர் மோடி, “சுதந்தர தின உரைக் குறித்து உங்களின் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். நரேந்திர மோடி ஆப் அல்லது மைகவ் ஆப் மூலம் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்” என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார். இதன் மூலம், மக்களின் கருத்துக்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுபவை குறித்து பிரதமர் மோடி உரையாற்றுவார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. ட்விட்டரில் பதிவிட்ட சில நிமிடங்களிலேயே, நூற்றுக்கும் மேற்பட்ட கருத்துக்கள் கமெண்டில் பதிவாகி இருந்தன.

2018 ஆகஸ்டு மாதம் நடைப்பெற உள்ள சிறப்பு நிகழ்ச்சியில், ஐந்தாவது முறையாக பிரதமர் மோடி சுதந்தர தின உரையாற்ற உள்ளார். கடந்த ஆண்டு நடைப்பெற்ற சுதந்தர தின நிகழ்ச்சியின் போது, ஒரு மணி நேரத்திற்கும் குறைவாக பிரதமர் உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

.